'500 மில்லியன் பயனர்கள்!'.. கடந்த 72 மணி நேரத்தில் 25 மில்லியன் பேர் இணைந்தனர்!.. ‘வாட்ஸ் ஆப்.. சிக்னல்.. டெலிகிராம்’.. செயலிகளிடையே தொடங்கிய மும்முனைப் போட்டி!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

வாட்ஸ் ஆப் புதிய பிரைவேசி பாலிசி அறிமுகப்படுத்தியது. இதனை அடுத்து இந்த புதிய பாலிசியை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டும்தான் இந்த செயலியை பயன்படுத்த முடியும் என்கிற சூழல் உருவானது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த செயலியின் இந்த புதிய பிரைவேசி பாலிசி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

'500 மில்லியன் பயனர்கள்!'.. கடந்த 72 மணி நேரத்தில் 25 மில்லியன் பேர் இணைந்தனர்!.. ‘வாட்ஸ் ஆப்.. சிக்னல்.. டெலிகிராம்’.. செயலிகளிடையே தொடங்கிய மும்முனைப் போட்டி!

ALSO READ: “இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்...?” - புதிய சாதனை படைத்த நடராஜன்... VIDEO வெளியிட்டு புளங்காகிதம் அடைந்த BCCI - நெகிழ்ச்சியில் நெட்டிசன்ஸ்...!!!

இதனை அடுத்து தனிநபர் பாதுகாப்பு, தனிநபர் தகவல்கள், தனி உரிமை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் எழுந்தது. இதனிடையே வாட்ஸ் ஆப் இந்த புதிய பிரைவேசி பாலிசி தனிநபர் பாதுகாப்புக்கு எதிரானது அல்ல என்றும் தனி நபர் தகவல்கள் யாருடனும் பகிரப்படாது என்றும் விளக்கம் அளித்தது. அதேசமயம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வாட்ஸ் ஆப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

25 million users joined telegram in 72 hrs whatsapp,signal competition

அதற்குள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துவதை தவிர்த்து, பலரும் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவதற்கு முடிவெடுத்தனர். பெரும் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் டெலிகிராம், சிக்னல் செயலிகளை பயன்படுத்த சொல்லி ஆலோசனை கூறுகின்றனர். மக்களிடையே இதெல்லாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாட்ஸ் ஆப் பயனாளர்கள் தங்கள் கவனத்தை டெலிகிராம் தங்கள் பக்கம் திருப்புகின்றனர்.

25 million users joined telegram in 72 hrs whatsapp,signal competition

இதையடுத்து கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 25 மில்லியன் ஆக அதிகரித்திருக்கிறது. தற்போது 500 மில்லியன் பேர் டெலிகிராம் பயன்படுத்தக்கூடிய ஆக்டிங் பயனாளர்களாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசிய கண்டத்தில் இருந்து மட்டும் 38 சதவீதத்தினர் டெலிகிராமை பயன்படுத்துகின்றனர். ஐரோப்பாவில் 27 சதவிகிதத்தினர், லத்தீன் அமெரிக்க நாடுகளில் 21 சதவீதத்தினர் தற்போது இணைந்து இருக்கின்றனர்.

இதுகுறித்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை குலைக்கும் செயலில் டெலிகிராம் எப்போதும் இறங்காது என்றும் அந்த நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்திருக்கிறார். அத்துடன் ஆப்பிள் பயன்படுத்தக்கூடிய பயனாளர்களிடையே சிக்னல் செயலி முதலிடத்திலும், டெலிகிராம் இரண்டாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் ஆப் என்பது இப்போது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த செயலின் மீது மக்கள் நம்பிக்கையை இழப்பதுதான் இதற்கு காரணம் என்றும் பேசப்படுகிறது.

 

25 million users joined telegram in 72 hrs whatsapp,signal competition

தனிநபர் பாதுகாப்பு தகவல்களை பேஸ்புக் உள்ளிட்ட வேறு ஆப்களுடன் வாட்ஸ் ஆப் பகிர்ந்து கொள்வதாக கூறப்பட்டது இதற்கு முக்கியமான காரணம். வாடிக்கையாளர்களின் மன நிலை மற்றும் தனிநபர் பாதுகாப்பு தகவலை அறிந்து கொண்டு அதற்கு தகுந்த விளம்பரங்களை வடிவமைப்பதற்கு இந்த புதிய பிரைவேசி பாலிசி உதவுவதாக வாட்ஸ் ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லொகேஷன் எப்போதும் ஆன் செய்து இருக்க வேண்டும் என வாட்ஸ் ஆப் கூறுகிறது.

25 million users joined telegram in 72 hrs whatsapp,signal competition

ஒருவேளை லொகேஷன் ஆப் செய்தால் ஐபி அட்ரஸ் மற்றும் தொலைபேசி கோட் உள்ளிட்டவற்றை வாட்ஸ் ஆப் டிராக் செய்வதாகவும் தெரிகிறது. இப்படி புதிய விதிமுறைகள் அனைத்தும் டயக்னாஸ்டிக் மற்றும் ட்ரபுள் சூட்டிங் காரணங்களுக்காக மட்டும்தான் என வாட்ஸ்அப் விளக்கம் அளித்திருக்கிறது.

ALSO READ: ‘புதிய பிரைவேசி பாலிசி சர்ச்சை’.. “100% தெளிவாகுங்கள்.. எங்க நோக்கம் இதுதான்!” - WhatsApp-ன் அதிகாரப்பூர்வ விளக்கம்!

ஆனாலும் இந்த தனிநபர் தகவல்களை கண்காணிக்க அந்த நிறுவனம் செய்யக்கூடிய மோசடி என பல பயனர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்காக அந்த நிறுவனம் அளிக்கும் விளக்கமும் மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டு பண்ணவில்லை. எனவே டெலிகிராம் செயலிகளின் பயன்பாடு மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது.

25 million users joined telegram in 72 hrs whatsapp,signal competition

இன்னும் பலர் சிக்னல் செயலிகளுக்கும் மாறி வருகின்றன. அரிதாக சிலர் வாட்ஸ் ஆப்பின் விளக்கத்தை ஏற்றும், இவ்வளவு காலம் வாட்ஸ் ஆப் பயன்படுத்தியதாலும், வாட்ஸ் ஆப்பிலேயே தொடர முடிவெடுத்துள்ளனர். இதனால் இந்த 3 செயலிகளுக்கும் மும்முனை போட்டி தொடங்கியது என்றே சொல்லலாம். 

மற்ற செய்திகள்