சென்னையில் எந்தெந்த ஏரியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது?.. எங்கே அதிகம்? இடங்களின் பட்டியல் வெளியீடு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்த பட்டியலை சென்னை கார்ப்ரேஷன் வெளியிட்டுள்ளது.

சென்னையில் எந்தெந்த ஏரியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது?.. எங்கே அதிகம்? இடங்களின் பட்டியல் வெளியீடு..!

தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டுமே 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களை சென்னை கார்ப்ரேஷன் வெளியிட்டுள்ளது.

அதில் திருவெற்றியூர் மண்டலத்தின் எண்ணூர் பகுதியில் 2 பேர், தண்டையார்பேட்டை மண்டலத்தின் உள்ள வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதியில் 5 பேர், ராயபுரம் மண்டலத்தில் உள்ள பிராட்வே, ராயபுரம், புதுப்பேட்டை பகுதியில் 10 பேர், திருவிக நகர் மண்டலத்தின் பெரம்பூர் பகுதியில் ஒருவர், அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள அரும்பாக்கம், அண்ணா நகர், அமைந்தகரை மற்றும் புரசைவாக்கம் பகுதியில் 7 பேர், தேனாம்பேட்டை மண்டலத்தின் சாந்தோம், கோடம்பாக்கம் பகுதியில் 4 பேர், கோடம்பாக்கம் மண்டலத்தின் உள்ள சைதாப்பேட்டை மற்றும் மாம்பலம் பகுதியில் 6 பேர், வளசரவாக்கம் பகுதியில் உள்ள போரூர் பகுதியில் 2 பேர், ஆலந்தூர் பகுதியில் ஒருவர், அடையார் மண்டலத்தின் கோட்டூர்புரம், திருவான்மியூர் பகுதியில் 2 பேர், பெருங்குடி மண்டலத்தின் மடிப்பாக்கம் பகுதியில் 3 பேர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள பனையூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் பகுதியில் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

CORONA, CORONAVIRUS, CHENNAI