"பணம் சம்பாதிக்கணுமா?".. யூடியூப் மூலம் வசீகர பேச்சு.. முந்தியடித்து வந்து ஷாக் ஆன மக்கள்.. மலைக்க வைக்கும் மாஸ்டர் பிளான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை: யூடியூப் மூலம் பார்வையாளர்களை கவர்ந்து, ஃபோரெக்ஸ் டிரேடு முதலீடு செய்ய வைத்து 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி முதலீட்டாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

"பணம் சம்பாதிக்கணுமா?".. யூடியூப் மூலம் வசீகர பேச்சு.. முந்தியடித்து வந்து ஷாக் ஆன மக்கள்.. மலைக்க வைக்கும் மாஸ்டர் பிளான்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் வந்த திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பி, விமல்குமாரையும், ராஜேஸ்வரியையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட நபர் முருகன் என்பவர் கூறுகையில், "எங்களை ஏமாற்றி விட்டு தலைமறைவானவர்களை கைது செய்து, பணத்தை திரும்ப பெற்று தாருங்கள்" என்று கூறினார். பின்னர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாதிக்கப்பட்ட நபர்கள் மனு அளித்தனர்.

யார் இந்த விமல்குமார்?

கோயம்புத்தூர் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விமல்குமார். இவர், மிஸ்டர் மனி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சேனலில் அடிக்கடி லைவ் வரும் இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் பணத்தை ஃபோரெக்ஸ் டிரேடிங்கில் ( ஆன்லைன் வர்த்தகம்) முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பேசி வந்துள்ளார். மேலும், யூடியூப் சேனலை பார்க்கும் நபர்களை போனில் அழைத்து, அவர்களை நேரில் பார்த்து கூட்டம் போட்டு, தனது பெயர் மூலம் முதலீடு செய்தால் மாதம் 8 விழுக்காடு வட்டித்தொகை அதிகரிக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

YouTuber Vimalkumar fraudulently investing in Forex Trade

300 கோடி ரூபாய் வரை முதலீடு

இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆல்பா ஃபோரெக்ஸ் என்ற பெயரில் அலுவலகங்களை அமைத்து, அதற்கான முகவர்களை 50 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணியமர்த்தி, அவர்கள் மூலம் பணத்தை திரட்டியுள்ளார். இதனால்  மாநிலம் முழுவதும் சுமார் 3000 த்திற்கும் மேற்பட்டோர் சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதலீடு செய்தவர்களுக்கு வட்டித்தொகை நீண்ட நாட்களாக வராமால் இருந்த நிலையில், முகவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என தெரிய வந்தது.

முதலீட்டாளர்கள் ஏமாற்றம்

இதனால், சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள் விமல்குமாரையும், அவரது மனைவி ராஜேஸ்வரியை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், இருவரது மொபைலும் சுவிட்ச் ஆப் எனக் கூறியதாக தெரிகிறது. பலமுறை விமல்குமாரை நேரில் சந்திக்க சென்ற போது, அவரது அலுவலகமும் மூடப்பட்டிருந்தது. இதனால் பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர்.  இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பி, விமல்குமாரையும், ராஜேஸ்வரியையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

YouTuber Vimalkumar fraudulently investing in Forex Trade

COIMBATORE, YOUTUBER VIMALKUMAR, COLLECTOR OFFICE, FRAUDULENTLY INVESTMENT, PEOPLE

மற்ற செய்திகள்