திடீர்னு ஒன்று சேர்ந்து இளைஞர்கள் பாடிய பாடல்.. நெகிழ்ச்சிக்குள்ளான திருநங்கை.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருநங்கை ஒருவருக்காக இளைஞர்கள் சேர்த்து இசையுடன் பாடும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

திடீர்னு ஒன்று சேர்ந்து இளைஞர்கள் பாடிய பாடல்.. நெகிழ்ச்சிக்குள்ளான திருநங்கை.. வைரல் வீடியோ..!

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | "கூட்டுக்குடும்பம்தான் நம்ம கலாச்சாரம்".. விஜய் நடித்த வாரிசு படத்துக்கு குழந்தைகள் & முதியோரை அழைத்துச்சென்ற தனியார் பள்ளி..!!

சமூக வலைதளங்கள் எப்போதும் பல எமோஷனலான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அந்த வகையில் திருநங்கை ஒருவருக்காக இளைஞர்கள் சேர்த்து இசையுடன் பாடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Youths sang For Transgender Woman in Railway station video

Images are subject to © copyright to their respective owners.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் உள்ள படிக்கட்டுகளில் திருநங்கை ஒருவர் நின்றிருக்கிறார். அப்போது அங்கு சென்ற சில இளைஞர்கள் அவரை பார்த்திருக்கின்றனர். அப்போது திடீரென அந்த இளைஞர்களில் சிலர் 'கதைப்போமா. பாடலை பாட, அவர்களுள் ஒருவர் அதற்கு கிட்டார் மூலமாக இசை கொடுத்திருக்கிறார். இதனை புன்னகையுடன் அந்த திருநங்கை கேட்டுக்கொண்டிருக்கிறார். பின்னர் அவர் வெட்கத்தால் சிரித்தபடி எனது முகத்தை மூடி கொள்கிறார்.

Youths sang For Transgender Woman in Railway station video

Images are subject to © copyright to their respective owners.

திருநங்கைக்காக இளைஞர்கள் தீடீரன ஒரு குட்டி கச்சேரியை நடத்தியதால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்த சக பயணிகள் அனைவரும் ஆச்சரியப்பட்டு போனதுடன் அவர்களது பாடலை அப்படியே மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Youths sang For Transgender Woman in Railway station video

Images are subject to © copyright to their respective owners.

திருநங்கைகள் உள்ளிட்ட மாற்று பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களுடைய உரிமையும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என அரசும் பல தனியார் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன. இருப்பினும் சில இடங்களில் அவர்களுக்கான உரிமையோ வாய்ப்புகளோ அளிக்கப்படுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் மாற்று பாலினத்தவர்கள் சரிசமமாக நடத்தப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் வேளையில் திருநங்கைக்காக இளைஞர்கள் பாடல் பாடும் இந்த வீடியோ பலரது மனதையும் கவர்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Also Read | பிறந்தநாள் Giftனு ஆசையா பிரிச்சு பார்த்தா.. இப்படி பங்கம் பண்ணிட்டீங்களே..😅 வீடியோ..!

YOUTHS, TRANSGENDER, TRANSGENDER WOMAN, RAILWAY STATION, YOUTHS SANG FOR TRANSGENDER WOMAN

மற்ற செய்திகள்