"ஆன்லைனில் பணம் அனுப்புறேன்".. ஸ்மார்ட் டிவியை திருடிச்சென்ற ஸ்மார்ட் இளைஞர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை அருகே நூதனமான முறையில் ஸ்மார்ட் டிவியை திருடி சென்ற இளைஞரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

"ஆன்லைனில் பணம் அனுப்புறேன்".. ஸ்மார்ட் டிவியை திருடிச்சென்ற ஸ்மார்ட் இளைஞர்...!

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நீட் தேர்வை ஒழிக்கணும், அது வரைக்கும் ஓயமாட்டேன்".. முதல்வர் மு.க. ஸ்டாலின் லட்சியம் இது தான்.. Exclusive!!

ஸ்மார்ட் டிவி

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல மின் சாதன பொருள் விற்பனை கடையில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இந்தக் கடைக்கு கடந்த 26 ஆம் தேதி இளைஞர் ஒருவர் வந்திருக்கிறார். கச்சிதமாக உடையணிந்து காரில் வந்திறங்கிய அந்த இளைஞர் தனக்கு 55 அங்குல டிவி வேண்டும் என கடையில் இருந்த பணியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து கடையில் வைக்கப்பட்டிருந்த பலவிதமான டிவிகளை அந்த இளைஞருக்கு பணியாளர்கள் காட்டியுள்ளனர். அப்போது ரூபாய் 45 ஆயிரம் மதிப்புள்ள டிவி ஒன்றை தனக்கு பிடித்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார் அந்த இளைஞர்.

Youth Theft Smart TV in showroom Cops under Investigation

Images are subject to © copyright to their respective owners.

ஆன்லைன் மூலம் பணம்

இளைஞர் வாங்கிய டிவியை பரிசோதித்த பின்னர் அதற்கு பில் போட பணியாளர் முயற்சித்திருக்கிறார். அப்போது தன்னிடம் கையில் பணம் இல்லை என்றும் ஆன்லைனில் பணம் அனுப்புவதாகவும் அந்த இளைஞர் கூறி இருக்கிறார். இதனை அடுத்து அங்கிருந்த கியூஆர் கோட் மூலமாக பணம் அனுப்புவது போல பாசாங்கு செய்திருக்கிறார் அந்த இளைஞர். அதன் பிறகு வேறொருவருக்கு பணம் அனுப்பிய ஸ்க்ரீன் ஷாட்டை கடையில் இருந்த பணியாளரிடம் காட்டிவிட்டு ஸ்மார்ட் டிவியுடன் அங்கிருந்து தப்பி சென்று இருக்கிறார் அந்த இளைஞர்.

Youth Theft Smart TV in showroom Cops under Investigation

Images are subject to © copyright to their respective owners.

காவல்துறையில் புகார்

இளைஞர் அங்கிருந்து துரிதமாக சென்ற பிறகு, தனது அக்கவுண்டிற்கு பணம் வராததால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிதந்திருக்கிறார். இதனை தொடர்ந்து கடைக்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது காரில் வந்த இளைஞர் இரண்டு நிமிடம் அந்தப் பகுதியை நோட்டமிட்டு அதன் பின்னர் கடைக்குள் வந்தது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து தொடர் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் பள்ளிக்கரணை பகுதியிலும் இதே போல திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்து அந்த மோசடி நபரை வலைவீசி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Also Read | வரலாற்றிலேயே முதல்முறை.. நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி மகுடம் சூடிய இரு பெண்கள்..!

YOUTH, THEFT, SMART TV, SHOWROOM, CHENNAI

மற்ற செய்திகள்