‘படுத்தவுடன் தூக்கம் வர மாதிரி தலைகாணி வேணும்’!.. ‘ஒரு 5 நிமிசம் வெய்ட் பண்ணுங்க சார்’.. குடோனுக்கு போன ஓனர்.. அடுத்த நொடி இளைஞர் பார்த்த வேலை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தலைகாணி வாங்குவதுபோல் நடித்து இளைஞர் ஒருவர் ஜவுளிக்கடையில் நூதன முறையில் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘படுத்தவுடன் தூக்கம் வர மாதிரி தலைகாணி வேணும்’!.. ‘ஒரு 5 நிமிசம் வெய்ட் பண்ணுங்க சார்’.. குடோனுக்கு போன ஓனர்.. அடுத்த நொடி இளைஞர் பார்த்த வேலை..!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தர்மராஜ் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை டிப்டாப் இளைஞர் ஒருவர் தர்மராஜின் கடைக்கு வந்துள்ளார். அப்போது, தான் தலைகாணி வாங்க வந்ததாகவும், படுத்தவுடன் தூக்கம் வருவதுபோல தலைகாணி வேண்டும் என்றும் அந்த இளைஞர் கேட்டுள்ளார். இதனால் கடையில் இருந்த அனைத்து தலைகாணிகளையும் தர்மராஜ் எடுத்துக் காண்பித்துள்ளார்.

ஆனால் திருப்தியடையாத அந்த இளைஞர், ‘இந்த டிசைன்கள் பிடிக்கவில்லை, கலர்ஃபுல்லாக காட்டுங்கள்’ என தர்மராஜிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த இளைஞரிடம், ‘ஒரு 5 நிமிசம் வெய்ட் பண்ணுங்க சார், நீங்க கேக்குற மாதிரி தலைகாணி குடோன்ல இருக்கு, கொண்டு வந்து காட்டுறேன்’ என கூறிவிட்டு தர்மராஜ் குடோனுக்கு சென்றுள்ளார்.

அப்போது கடைக்குள் தனியாக இருந்த டிப்டாப் இளைஞர், கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.10,000 பணத்தை எடுத்துவிட்டு ஓடியுள்ளார். குடோனிலிருந்து தலைகாணிகளுடன் கடைக்கு வந்த தர்மராஜ், கல்லாப்பெட்டி திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அந்த இளைஞர் தப்பியதை உணர்ந்த தர்மராஜ் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் கடைக்கு வந்த போலீசார், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தனர். அதில் அந்த இளைஞரின் முகம் பதிவாகியுள்ளதால், அதனடிப்படையில் ஜவுளிக்கடையில் பணத்தை திருடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்