கொரோனா வார்டில் 'கபடி'... வீடியோ வைரலானதால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வார்டில் கபடி விளையாடிய வீடியோ வைரலானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொரோனா வார்டில் 'கபடி'... வீடியோ வைரலானதால் பரபரப்பு!

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூப்ளி விடுதியிலும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அங்கும் பலர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் விடுதியில் உள்ள மொட்டை மாடியில் இளைஞர்கள் சிலர் கபடி விளையாடுவது போலவும், மற்றவர்கள் அதை சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது போலவும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இதுகுறித்து அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த விடுதிக்கு சென்று மொட்டை மாடியை இழுத்து பூட்டி விட்டு சென்றனர்.

மற்ற செய்திகள்