வீடியோ: VIP இளைஞர்களை டார்கெட் செய்யும் மோசடி கும்பல்... மோசடி பெண்ணிடம் LIVE-ஆக பேசிய Anchor! - உஷார் Interview!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

BEHINDWOODS நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

வீடியோ: VIP இளைஞர்களை டார்கெட் செய்யும் மோசடி கும்பல்... மோசடி பெண்ணிடம் LIVE-ஆக பேசிய Anchor! - உஷார் Interview!!

தனக்கு விருப்பமான ஊடகத் துறையில் சாதிக்க நினைத்த இளைஞர் ஒருவர் Olx-ல் யாரவது Content writer தன்னோடு இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர் தொடர்புக் கொள்ளலாம் என விளம்பரம் செய்து அதில் தன் செல்பேசி எண்ணையும் பதிவிட்டுள்ளார். சில தினங்களுக்கு பின் வந்த ஒரு போன்காலில் சந்தோஷினி என்ற பெண் அறிமுகமாகி, தனக்கு BEHINDWOODS நிறுவனத்தின் அதிகாரி ஒருவருடன் நல்ல பழக்கம் உள்ளதாகவும், தான் பரிந்துரை செய்தால் பணி கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய இளைஞர் தொடர்ந்து பேசியுள்ளார். அப்போது முதல்கட்டமாக பயிற்சி அளிப்பதற்காக 7000 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லாத போதும், நண்பர்களிடம் கடன் வாங்கி அந்த பணத்தை அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து BEHINDWOODS அலுவலகத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன், குக்கு வித் கோமாளி புகழ் போன்றோர் வரும் நிகழ்விற்கு வருவதற்கு தேர்வாகியுள்ளதாக சொல்லி, அதற்கும் 400 ரூபாய் பணம் கேட்டுள்ளுனர்.

சந்தோஷினி என்ற பெண் பேசுவது மட்டுமல்லாமல் priya behindwoods என்ற ஜிமெயில் கணக்கில் இருந்தும் தொடர்ந்து தகவல்கள் அனுப்பட்டு வந்துள்ளது. இதனை அப்படியே நம்பிய இளைஞரும் பணத்தை அனுப்பியுள்ளார். மேலும் ஒரு வருடம் தங்குவதற்கான இடம் மற்றும் உணவுக்கான செலவாக ரூ.20,000 அனுப்புமாறு கூறியுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொல்ல, தற்போது இருக்கும் பணத்தையாவது அனுப்புங்கள் என வற்புறுத்தி பணத்தை வாங்கியுள்ளனர். மேலும் சமீபத்தில் கிஷோர் என்ற இளைஞருக்கு வேலை வாங்கி தந்ததாகவும் கூறியுள்ளனர். அப்போது கிஷோரின் நம்பரை கொடுங்கள் என்று கேட்டபோது, அவருக்கு வேலை பிடிக்கவில்லை, அதானால் வேலையை விட்டு நின்றுவிட்டார் என்று கூறியுள்ளனர்.

ஒருகட்டத்தில் அந்த இளைஞரை சென்னைக்கு வர சொல்ல, அவரும் கிளம்பி வந்துள்ளார். ஆனால் ஒவ்வொரு தடவை போன் செய்யும் போதும் ஒவ்வொரு காரணத்தை கூறி வந்துள்ளனர். குறிப்பாக நடிகர் விவேக் மரணம், BEHINDWOODS நிறுவனத்தில் இருவருக்கு கொரோனா வநதுள்ளது என சமாளித்து வந்துள்ளனர். அதன் பின்னர் தான் இந்த மோசடி கும்பல் மேல் சந்தேகம் வந்துள்ளது, அந்த இளைஞருக்கு. இரு நாட்களில் வேலை கிடைத்துவிடும் என்று நம்பி வந்த இளைஞர் பணத்தை இழந்து நடுரோட்டில் பசியோடு நின்றுள்ளார்.

உறவினர் ஒருவர் மூலம் BEHINDWOODS நிறுவன அதிகாரிக்கு மின்னஞ்சல் அனுபியுள்ளார். அப்போது அழைத்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் behindwoods நிறுவனம் அல்லாத பிரபல ஐடி நிறுவனங்கள் பேரிலும் இந்த மோசடி நடப்பது தெரிய வந்துள்ளது. தான் ஏமாந்ததை போன்று கனவுகளோடு பயணிக்கும் பிற இளைஞர்கள் ஏமாந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் Behindwoods Air தொலைகாட்சியில் அந்த இளைஞர் நேர்காணல் அளித்துள்ளார்.

இந்த இளைஞர் போல், வேறு எவரும் ஏமாந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், BEHINDWOODS நிறுவனம், இந்த செய்தியுடன் கீழ் காணும் வீடியோவுடன் ஒரு முக்கிய அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

DISCLAIMER

We bring to the notice of all concerned that we, that is, Behindwoods, have deployed a merit-based employee selection practice. We do not charge / accept any amount or security deposit from job seekers during the selection process or while inviting candidates for an interview.

We have noticed that fake job offers in the name of companies, Behindwoods and Nian Media Private Limited have been circulated by some unauthorised persons / fraudsters. Some fraudsters are using the names of Behindwoods to solicit job applications that require the job seekers / applicants to pay processing fees or deposit amount by sending fake e-mails or by making fraudulent telephone calls.

If any person receives any unsolicited or fraudulent communication offering a job or an interview call from Behindwoods against payment of money, it is suggested not to respond. On receipt of an interview call for any job in the name of Behindwoods, the candidate may take some measures such as visiting the official website of the concerned Behindwoods company to get the contact details to enquire with the human resources department of such company about the interview details and other relevant information.

We also wish to bring to the notice of all concerned that spam e-mails are being sent in the name of Behindwoods with the intention of committing fraud and illegally obtaining confidential information and / or money from people. In case, you receive any kind of offers, prizes or requests for personal information via e-mail, purporting to be from Behindwoods company, you are advised to make sure it is genuine before responding.

We want to urge you to be cautious when opening links or attachments from unknown third parties. Please note that Behindwoods does not send e-mails asking for your credit card number or other personally identifiable information nor do we charge or accept any amount or security deposit from any participant for any competition, marketing promotions or campaigns. Any communication suggesting such payment is contrary to our policy.

Please check www.behindwoods.com, the official website of Behindwoods to get the contact details and enquire with the company to confirm if the offers or promotions are genuine - Do not respond to any fraudulent communication.

We state that we have already lodged complaints with the law and order authorities about the said fraudulent actions. We shall not accept any liability towards the representation made in any fraudulent communication or its consequences, and such fraudulent communication shall not be treated as any kind of offer or representation by any Behindwoods company.

மற்ற செய்திகள்