"பசங்க கைவிட்டுட்டாங்க".. ஆதரவற்ற பாட்டிக்கு இளைஞர் செய்த உதவி.. கண்கலங்கி அவங்க சொன்ன வார்த்தை.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆதரவற்ற மூதாட்டி ஒருவருக்கு இளைஞர் ஒருவர் உதவி செய்யும் வீடியோ ஒன்று பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

"பசங்க கைவிட்டுட்டாங்க".. ஆதரவற்ற பாட்டிக்கு இளைஞர் செய்த உதவி.. கண்கலங்கி அவங்க சொன்ன வார்த்தை.. வீடியோ..!

Also Read | "நானா கொரோனாவான்னு ஒரு கை பாத்துடறேன்".. Couple Goal ஐடியா.. Viral வீடியோ..!

பொதுவாகவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எந்த வித சிரமங்களையும் எதிர்கொள்ள தயாராகவே இருப்பார்கள். தங்களுடைய மகன் மற்றும் மகள்கள் சாதிக்க பல இடையூறுகளை பெற்றோர்கள் சந்திக்கவும் தயங்குவது இல்லை. குழந்தைகளை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்வதையே ஒவ்வொரு பெற்றோரும் தங்களது வாழ்வின் மிக முக்கியமான கடமையாக கருதுகின்றனர். இப்படி தங்களை வளர்க்க பல தடைகளை எதிர்கொண்ட பெற்றோரை அவர்களது முதுமை காலத்தில் சில பிள்ளைகள் கவனிப்பது இல்லை என்பது கசப்பான உண்மை.

Youth gives food and dress to Destitute old lady video goes viral

சாலை ஓரங்களில் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தும் இதுபோன்ற வயதான மக்களுக்கு தொடர்ந்து தனியார் அமைப்புகளும் பொதுமக்களும் உதவி செய்துவருகின்றனர். அந்த வகையில் மாஸ்க் மேன் என்ற இளைஞர் ஒருவர் ஆதரவற்ற மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவருகிறார். முக கவசத்தோடு உதவிகள் செய்யும் இவர்,"உதவி செய்ய மனம் இருந்தால் போதும் முகம் தேவையில்லை" என்ற வாசகம் எழுதப்பட்ட உடையை அணிந்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் வயதான மூதாட்டி ஒருவருக்கு உதவியுள்ளார். சாலை ஓரத்தில் அமர்ந்திருக்கும் அந்த பாட்டிக்கு உணவு வாங்கிக்கொடுத்த இவரை வாயார வாழ்த்துகிறார் அந்த பாட்டி. அப்போது, பாட்டிக்கு புதிய சேலை ஒன்றையும் மாஸ்க் மேன் அளிக்கிறார். இதனை கண்டு அந்த பாட்டி நெகிழ்ந்து போகிறார். இளைஞரிடம்,"உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?" என அந்த பாட்டி கேட்கிறார்.

Youth gives food and dress to Destitute old lady video goes viral

அதற்கு,"இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல" என அந்த இளைஞர் பதில் சொல்கிறார். உடனே அந்த பாட்டி,"நீ நல்லா இருக்கணும். நல்லா பொண்ணா கிடைக்கும் தம்பி உனக்கு" என முழுமனதுடன் வாழ்த்துகிறார். தொடர்ந்து அந்த இளைஞரிடம்,"பெத்த புள்ளைங்க விட்டுட்டாங்க. யாசகம் வாங்கி பிழைக்கிறேன். அவங்கவங்க வேலையை அவங்க பாக்குறாங்க. நம்மள யாரு பாத்துக்குவா?" என உருக்கமாக தெரிவிக்கிறார். தொடர்ந்து, தனக்கு உதவி செய்த அந்த இளைஞரை வாயார வாழ்த்துகிறார் அந்த பாட்டி. இந்நிலையில் இந்த வீடியோ பலரையும் நெகிழ செய்திருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த இளைஞருடைய முயற்சியை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

 

Also Read | நேபாளத்தில் வாலிபால் விளையாட சென்ற தமிழக வீரருக்கு நேர்ந்த சோகம்.. இறுதி சடங்கில் ஊர் மக்கள் செய்த நெகிழ்ச்சி காரியம்..!

YOUTH, FOOD, DRESS, DESTITUTE OLD LADY

மற்ற செய்திகள்