என் 'தம்பி' சாகுறதுக்கு... ஸ்கெட்ச் போட்டு 'கொலை' செய்த அண்ணன்... 'சென்னை'யில் நடந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை வடபழனி குமரன் காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது நண்பர் அஜித். கடந்த மாதம் ஏரி ஒன்றில் ரமேஷ், அஜித் மற்றும் வேறு சிலர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அஜித் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

என் 'தம்பி' சாகுறதுக்கு... ஸ்கெட்ச் போட்டு 'கொலை' செய்த அண்ணன்... 'சென்னை'யில் நடந்த பயங்கரம்!

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அஜித் மரணத்திற்கு ரமேஷ் மற்றும் அவருடன் சென்ற சிலர் தான் காரணம் என அஜித்தின் அண்ணன் கருதியுள்ளார். அதே நேரத்தில் தம்பியை ரமேஷ் மற்றும் கூட்டாளிகள் கொலை செய்து விட்டதாகவும் அஜித்தின் சகோதரர் சந்தேகமடைந்துள்ளார். இதுதொடர்பாக ரமேஷிற்கும், அஜித் அண்ணனுக்கும் முன்விரோரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், விருகம்பாக்கம் பகுதியில் சிலருடன் ரமேஷ் மது அருந்தியுள்ளார். அப்போது போதையில் இருந்த ரமேஷை ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தியால் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளது. ரமேஷின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை பரிசோதித்த போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது தம்பியின் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்க அஜித்தின் சகோதரர் திட்டம் தீட்டியுள்ளார். அதன் தூண்டுதலின் பெயரில், ரமேஷ் கொலை செய்யப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலையில் தொடர்புடைய ஒருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக இருக்கும் சிலரை தேடி வருகிறோம் என விருகம்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்