'சேட்டை' பண்ணாம கீழே இறங்கி வாப்பா... அந்த 'பொண்ண' கல்யாணம் பண்ணி வைங்க... 'பரபரப்பை' ஏற்படுத்திய 'இளைஞர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சுமார் 100 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறிய இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த ராஜபாண்டியன் என்பவருக்கு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணிபுரிந்து வந்த பெண்ணின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்ட ராஜபாண்டியன், தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனையடுத்து தனது பெற்றோருடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர்.
அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ராஜபாண்டியனை பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனவேதனையடைந்த ராஜபாண்டியன், அப்பகுதியில் இருந்த டவரின் மீது ஏறி தனது காதலியை தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார், பக்குவமாக பேசி இளைஞரை கீழிறங்கி வர செய்தனர். சுமார் ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளைஞரை மீட்டனர்.
அப்படி இறங்கிய போது ராஜபாண்டியனுக்கு சற்று மயக்கம் ஏற்படவே உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சுய நினைவு திரும்பியது குறிப்பிடத்தக்கது. இளைஞரின் தற்கொலை மிரட்டலால் அப்பகுதியில் சுமார் ஐந்து மணி நேரம் பரபரப்பு நிலவியது.
மற்ற செய்திகள்