'என் பிரச்சனைய தீர்த்துட்டு போங்க!'.. முதல்வர் காரை வழிமறித்து.. 'கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு'.. இளைஞரால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர்,  ராணிப்பேட்டை மாவட்டங்கள் தனித்தனியே பிரிக்கப்படும் விழாவிற்கு, வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராணிப்பேட்டையை தனி மாவட்டமாக உதயமாக்கிய விழாவை முடித்துக்கொண்டு, நலத்திட்டங்களை வழங்கினார்.

'என் பிரச்சனைய தீர்த்துட்டு போங்க!'.. முதல்வர் காரை வழிமறித்து.. 'கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு'.. இளைஞரால் பரபரப்பு!

அதைத் தொடர்ந்து தனது காரில், பாதுகாப்பு படை வீரர்கள் புடைசூழ புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோதுதான், அங்கு வந்த  நபர் ஒருவர் தனது கையில் இருந்த பையில் இருந்து கத்தியை எடுத்து, கழுத்தில் வைத்துக்கொண்டு,  ‘என் பிரச்சனைய தீர்த்து வெச்சிட்டு போங்க’ என்று அச்சுறுத்தியுள்ளார். இதனால் அந்த இடமே பதற்றமாகியது.

ஆனால் உடனடியாக விரைந்த பாதுகாப்பு படைவீரர்கள் அந்த நபரை ஆசுவாசப்படுத்தி, முதல்வரின் கார் செல்வதற்கான வழியினை செய்தனர். அதன் பின் அந்த நபரை விசாரித்தபோது, அவர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பதும், அவருக்கு கடன் கொடுத்தவர்களால் அவருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், எஸ்.பி வரை புகார் அளித்தும் வேறு வழி இல்லாததால் முதல்வரை இப்படி அணுகியதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் அவரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.