என்ன காதலிச்சதுக்கு '5 லட்சம்' நஷ்டஈடு குடு... கல்லூரி பெண்ணை வீடு 'புகுந்து' மிரட்டிய வாலிபர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கல்லூரி இளம்பெண்ணிடம் டீ லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் குனியாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(25). செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன் காதலித்து வந்தனர். ஆனால் கிருஷ்ணகுமாரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த மாணவி இவரிடம் பேசுவதை சில மாதங்களுக்கு முன் நிறுத்தி விட்டார்.
இதற்கிடையில் சம்பவ தினத்தன்று கல்லூரி மாணவியின் வீட்டுக்கு சென்ற கிருஷ்ணகுமார், நீ என்னை காதலித்து மிரட்டியதற்கு 5 லட்ச ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும். இல்லை என்றால் நாம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இதையடுத்து கல்லூரி மாணவி போலீசில் புகார் செய்ய அவர்கள் கிருஷ்ணகுமாரை கைது செய்து, பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மற்ற செய்திகள்