"அது என்னடா பாவம் பண்ணுச்சு!".. தன் மோகத்துக்கு பூனையைத் தூக்கிலிட்டு இளைஞர் செய்த.. நடுங்கவைக்கும் காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டிக்டாக் லைக்கிற்கு ஆசைப்பட்டு, வளர்த்த பூனையையே தூக்கில் தொங்கவிட்டு டிக்டாக் வீடியோ பதிவிட்ட இளைஞரது செயல் வைரலாகியுள்ளது.

"அது என்னடா பாவம் பண்ணுச்சு!".. தன் மோகத்துக்கு பூனையைத் தூக்கிலிட்டு இளைஞர் செய்த.. நடுங்கவைக்கும் காரியம்!

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் சுயம்பு. இவரது மகன் தங்கராஜ் தந்தையின் மாட்டுப்பண்ணை தொழிலில் அவருக்கு உதவியாக இருந்துவரும் நிலையில், அவ்வப்போது தான் வளர்க்கும் மாடுகளோடு டிக்டாக் வீடியோ எடுத்தும் அவ்வப்போது பதிவேற்றிவந்துள்ளார்.

ஆனால் இவர் எதிர்பார்த்த லைக்ஸ்கள் கிடைக்கவில்லை என்பதால், ஒரு படி மேலே போய், கடற்கரையில் படகில் சென்று வடிவேலு காமெடிக்கு டிக்டாக் செய்துள்ளார். அப்போதும் அவரது லைக்ஸ் ஆசை நிறைவேறாததால், அதிக லைக்ஸ்களை பெறுவதற்காக ஏதாவது புதுமையான வீடியோவை உருவாக்க திட்டம் தீட்டினார்.

இந்த நிலையில்தான் தான் செல்லமாக வளர்த்த பூனை இவரது கண்ணில் பட்டுள்ளது. உடனே, யோசித்தவர், பூனையை தூக்கில் தொங்கவிட்டு அதன் அருகில் நின்று டிக்டாக்கில் வீடியோ எடுத்து பதிவேற்றியுள்ளார். இதனை அறிந்த பழவூர் போலீஸார் தங்கராஜை மிருகவதைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்