'வெறும் ஸ்பேர் பார்ட்ஸ்க்காகதான் சாமி செஞ்சோம்'.. பதற வைக்கும் திருட்டு கும்பல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நூதன முறையில், பைக்கின் ஸ்பேர் பார்ட்ஸூக்காக மட்டும் மோட்டார் பைக்கை திருடிய கும்பல் சிக்கியுள்ள சம்பவம் சென்னையில் பிரலமாகியுள்ளது.

'வெறும் ஸ்பேர் பார்ட்ஸ்க்காகதான் சாமி செஞ்சோம்'.. பதற வைக்கும் திருட்டு கும்பல்!

சென்னை வேப்பேரியைச் சேர்ந்த 19 வயதான நிர்மல் குமாரின் வீட்டில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஒருநாள் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து அவர் போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தோஷ் குமார் என்பவர் சிக்கியுள்ளார்.

அவரை விசாரிக்கும்போது திடுக்கிடும் சில தகவல்கள் வெளியாகின. கொடுங்கையூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பணத்தை வைத்து நடக்கும் ரேஸில் ஈடுபடுவது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாவதென இருந்துவந்த சந்தோஷ்குமார் மீது முன்னமே பட்டினப்பாக்கம், சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையங்களில் வழங்குகள் நிலுவையில் இருந்தன.

பின்னர், நடந்தது என்ன என்று சந்தோஷ்குமார் விளக்கியுள்ளார். அதன்படி, வேலை இல்லாத சந்தோஷ்குமார், தான் வைத்திருக்கும் 200 சிசி கேடிஎம் பைக்கை ஓட்டுவந்துள்ளார். ஒருமுறை அவரது பைக் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன் ஸ்பேர் பார்ட்டினை மாற்றுவதற்கு அவர் மெக்கானிக் பிருத்விராஜ் என்பவரிடம் எடுத்துச் சென்றுள்ளார்.

ஆனால் அதற்கான ஸ்பேர் பார்ட் வேண்டும் என பிருத்விராஜ் கூறவும், தனது நண்பருடன் சென்று சந்தோஷ்குமார் நிர்மல்குமாரின் பைக்கை திருடியுள்ளார். சிசிடிவியில் பதிவான இந்த காட்சிகளைக் கொண்டு போலீஸார் ஏற்கனவே சந்தோஷ்குமாரை தேடிவந்த நிலையில், நிர்மல் குமார் மற்றும் இன்னொரு நபரின் 390 சிசி பைக்கின் ஸ்பேர் பார்ட்டுகளையும் திருடியுள்ளார்.

ஆனால் அந்த 390 சிசி பைக்கின் ஸ்பேர் பார்ட் தனக்கு பயன்படாததால், அதனை 8 ஆயிரம் ரூபாய்க்கு வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். அவரும் திருட்டு பைக் என்று தெரிந்தே வாங்கியுள்ளார். இந்த தகவல்கள் கிடைத்ததை அடுத்து சந்தோஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் பணம், போதை, பைக் ரேஸ் என ஒரு கூட்டமே அவரைப் போல் இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.

CHENNAI, BIKE, RACE, POLICE