உள்ளூர், வெளியூர்ன்னு 'ஜல்லிக்கட்டு'ல... 'கொடிகட்டி' பறந்த 'காளை'ங்க அது... அதுக்கு இப்டி ஒரு 'கொடுமை'ய பண்ணிட்டானுங்க... பதற வைக்கும் 'கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பரப்பட்டியில் வசித்து வருபவர் வெற்றிவேல். இவர் சென்னசந்திரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் சொந்தமாக காளை ஒன்றை வளர்த்தி வந்துள்ளார். அந்த காளை, பல்வேறு எருது விடும் விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளது. கடந்த ஐந்தாம் தேதி வழக்கம் போல தனது நிலத்தில் காளை மாட்டினை அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து விட்டு பணிக்கு சென்றுள்ளார். பின்னர், மாலை வந்து பார்த்த போது, மாடு கொம்புகள் உடைந்தும், வாய் பகுதியில் ரத்த காயங்களுடன் கிடந்தது.
தனது காளை மரத்தில் முட்டி தானாக இறந்திருக்கலாம் என வெற்றிவேல் நினைத்த நிலையில், அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள், மாட்டினை சென்னை அல்லது நாமக்கலுக்கு எடுத்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்குள் மாடு இறந்து போய் விட்டது. இதனையடுத்து தனது காளை மாட்டுக்கு கண்ணீருடன் இறுதி சடங்குகள் செய்து வெற்றிவேல் அடக்கம் செய்தார்.
ஆனால் காளை மாட்டின் மரணத்தில் அதிரடி திருப்பம் நிகழ்ந்துள்ளது. வெற்றிவேல் வாட்ஸ் அப் எண்ணிற்கு வீடியோ ஒன்று வந்தது. அந்த வீடியோவில், குடி போதையில் இருந்த இளைஞர் ஒருவர் அமைதியாக நின்றுக் கொண்டிருந்த காளையை ஆக்ரோஷப்படுத்தி, அதன் மூலம் காளை மோதி அடிபடும் கட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இளைஞர் காளையை தொடர்ந்து சீண்டும் போது, அந்த காளை கோபத்தில் இளைஞரை முட்ட முற்பட்டு மரக்கிளையில் சிக்கி கொம்புகள் உடைந்து விடுகிறது. சிறிது நேரத்தில் அந்த காளை சரிந்து கீழே விழுந்ததும் அந்த இளைஞர் மற்றும் கூட வந்த நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பொது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சில தினங்களுக்கு முன் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்த உணவை உண்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது கிருஷ்ணகிரியில் காளை ஒன்று இளைஞர்களால் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்