ராத்திரியில செல்போனுக்கு சார்ஜ் போட்ட இளைஞர்.. திடீர்னு கேட்ட அலறல் சத்தம்... பதறிப்போன நண்பர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாகர்கோவில் அருகே செல்போனில் சார்ஜ் ஏற்ற முயற்சி செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராத்திரியில செல்போனுக்கு சார்ஜ் போட்ட இளைஞர்.. திடீர்னு கேட்ட அலறல் சத்தம்... பதறிப்போன நண்பர்கள்..!

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | 11,000 வருஷமா குகைக்குள் இருந்த அரிய பொக்கிஷம்..! ஆச்சரியத்தில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்.!!!

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இயங்கி வரும் பழைய இரும்பு சாமான்கள் வாங்கும் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் தீபக். 27 வயதான இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். சொந்த ஊரிலிருந்து வேலை தேடி நாகர்கோவில் வந்த தீபக் இந்த கடையில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இவருடன் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவரது நண்பர்கள் மூன்று பேரும் இதே கடையில் பணிபுரிந்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடையிலிருந்து வேலை பார்த்துவிட்டு தங்கும் இடத்திற்கு சென்று இருக்கிறார் தீபக். அப்போது தன்னுடைய செல்போனில் சார்ஜ் குறைவாக இருப்பதை அறிந்த தீபக் சார்ஜ் போட நினைத்திருக்கிறார். அறையில் இருந்த மின்பெட்டி கட்டிலில் இருந்து சற்று தூரமாக இருந்ததால் வயர் மூலமாக மின்பெட்டியை இணைத்து சார்ஜ் போட முயற்சித்திருக்கிறார் தீபக். அப்போது மின் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தீபத்தின் உடலில் மின்சாரம் பாய்ந்திருக்கிறது.

Young worker dies due to shock while try to plug a charger \

Images are subject to © copyright to their respective owners.

இதன் காரணமாக அவர் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். அப்போது சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது நண்பர்கள் நிலைமையை அறிந்து உடனடியாக அவரை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர். அங்கு தீபக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணம் மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்து இருக்கின்றனர். இதனால் தீபத்தின் நண்பர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து இதுகுறித்து கோட்டார் பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Young worker dies due to shock while try to plug a charger

Images are subject to © copyright to their respective owners.

இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தீபத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீபத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஒடிசாவில் இருந்து அவரது உறவினர்கள் நாகர்கோவில் வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செல்போனில் சார்ஜ் போட முயற்சித்த வட மாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாகர்கோவில் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | "என்னுடைய இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டி".. கண்ணீருடன் வெளியேறிய சானியா மிர்ஸா.. வீடியோ..!

YOUNG, WORKER, SHOCK, PLUG, CHARGER

மற்ற செய்திகள்