‘அந்த ஒரே ஒரு மெசேஜ்’... ‘பரிதவிப்பில் இருந்த இளம்பெண்’... ‘விடுதியில் செய்த அதிர்ச்சி காரியம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உதகையில் சார்பு நீதிமன்ற எழுத்தர், தான் தங்கியிருந்த விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அந்த ஒரே ஒரு மெசேஜ்’... ‘பரிதவிப்பில் இருந்த இளம்பெண்’... ‘விடுதியில் செய்த அதிர்ச்சி காரியம்’!

கோவை மாவட்டம், புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் என்பவரின் மகள் 31 வயதான இந்திரா பிரியதர்ஷினி. இவர் டிஎன்பிஎஸ்சியில் தேர்ச்சி பெற்று, உதகையில் சார்பு நீதிமன்ற தட்டச்சராகப் பணியில் சேர்ந்தார். திருமணம் ஆகாதநிலையில்,  உதகையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி தினமும் பணிக்குச் சென்றுவந்தார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமையன்று, விடுதியில், விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார்.

இதையடுத்து அளித்த தகவலின்பேரில், இந்திரா பிரியதர்ஷினியின் மொபைல் போனை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பாபு என்ற இளைஞர் செல்போனில் அழைத்துள்ளதும், மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்தது. `நீ கிடைக்கலன்னா நான் தற்கொலை பண்ணிக்குவேன்' என்று அவர் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், `ராஜேஷ் பாபு மற்றும் அவரின் குடும்பத்தினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்திரா பிரியதர்ஷினியைப் பெண் பார்த்துச் சென்றுள்ளனர். பின்னர் விருப்பம் இல்லாததுபோல ராஜேஷ்பாபு வீட்டார் நடந்துள்ளனர். அதன் பின்னர் இந்திரா பிரியதர்ஷினிக்கு உதகை நீதிமன்றத்தில் அரசுப்பணி கிடைத்தது. இதனால்,  அவரை மணக்க மீண்டும் திருமணப் பேச்சுவார்த்தையில் ராஜேஷ் பாபு குடும்பத்தார் ஈடுபட்டுள்ளனர். 

இதை அறிந்துகொண்ட பெண் வீட்டார், ராஜேஷ்பாபு வீட்டாரை சந்திப்பதை தவிர்த்துள்ளனர். பின்னர் இந்திரா பிரியதர்ஷினி எண்ணை வாங்கிய ராஜேஷ்பாபு அவரிடம் பேசத் தொடங்கியுள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், இந்திரா வீட்டில் வேறு ஒருவரை திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இரண்டு பக்கமும் பதில் சொல்ல முடியாமல் தவித்த இந்திரா, என்ன செய்வதென்று தெரியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக’ போலீசார் தெரிவித்துள்ளனர்.

SUICIDE, OOTY, NILGIRIS