இளைஞருக்கு நடக்க இருந்த கல்யாணம்... மண்டபத்தில் என்ட்ரி கொடுத்த கர்ப்பிணி பெண் .. விஷயம் தெரிஞ்சதும் வந்தவங்க எல்லாம் வெலவெலத்து போய்ட்டாங்க"

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே  அமைந்துள்ள ஒத்தப்பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளதாகவும் தகவல்ககள் தெரிவிக்கின்றது.

இளைஞருக்கு நடக்க இருந்த கல்யாணம்... மண்டபத்தில் என்ட்ரி கொடுத்த கர்ப்பிணி பெண் .. விஷயம் தெரிஞ்சதும் வந்தவங்க எல்லாம் வெலவெலத்து போய்ட்டாங்க"

இதில், பாலமுருகனின் மூத்த மகளான நாகப்ரியா (வயது 30) பிசிஏ படித்து விட்டு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நாகப்ரியாவும் திருமங்கலம் பாண்டியன்நகர் என்னும் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரும் காதலித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்திலும் சாஃப்ட்வேர் என்ஜினீயராக சின்னசாமி பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகப்ரியா மற்றும் சின்னசாமி ஆகியோர் காதலித்து வந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில் பல இடங்களிலும் அவர்கள் ஒன்றாக சுற்றித் திரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில், நாகப்ரியா கர்ப்பம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதற்கு மத்தியில், சின்னசாமிக்கும் விருதுநகர் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, திருமங்கலம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்திலும் சின்னசாமிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தனது காதலருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடப்பதை அறிந்த நாகப்ரியா, அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இதனையடுத்து, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சின்னசாமிக்கு திருமணம் நடைபெற இருந்த மண்டபத்திற்கு நேராக சென்றுள்ளார்.

பின்னர், சின்னசாமி தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பதையும் நாகப்ரியா கூறி உள்ளார். இதனால், திருமண மண்டபத்தில் பரபரப்பும் நிலவி உள்ளது. இதுபற்றி தகவலறிந்ததும் மண்டபத்திற்கு போலீசாரும் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் நாகப்ரியா மற்றும் சின்னசாமி குடும்பத்தினரிடம் போலீசார் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், நாகப்ரியாவை திருமணம் செய்யவும் சின்னசாமி ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காதலுனுக்கு நடக்க இருந்த திருமணத்தை கர்ப்பிணி பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LOVER, MARRIAGE, WOMAN

மற்ற செய்திகள்