'நீலாம்பரி போல வீர வசனம்'... 'போதையில் போலீசாரிடம் இளம்பெண் வச்ச கோரிக்கை'... 'என்னம்மா சொல்ற'?... நள்ளிரவில் நடந்த பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொதுவாக, விபத்து நிகழ்த்தியோ அல்லது குடி போதையிலோ போலீசாரிடம் சிக்கிக் கொண்டால் அவர்களிடம் இருந்து எப்போது விடுபட முடியும் என்ற அனைவருக்கும் தோன்றும். ஆனால், சென்னையில் மது போதையில் விபத்து நிகழ்த்தி போலீசாரிடம் சிக்கிய இளம்பெண், வம்படியாக வைத்த கோரிக்கை ஒன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

'நீலாம்பரி போல வீர வசனம்'... 'போதையில் போலீசாரிடம் இளம்பெண் வச்ச கோரிக்கை'... 'என்னம்மா சொல்ற'?... நள்ளிரவில் நடந்த பரபரப்பு!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் நித்து. திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் என்னும் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் கடந்த ஓராண்டாக நித்து பயிற்சி பெற்று வந்த நிலையில், பயிற்சி நிறைவையொட்டி சக நண்பர்களுடன் மணவாளநகர் என்னும் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அளவுக்கு அதிகமாக நித்து மது அருந்தியுளார். அதன்பிறகு, அங்கிருந்து தனது ஜீப்பை எடுத்துக் கொண்டு வேகமாக கிளம்பியுள்ளார்.

சிறிது தூரம் சென்றதுமே தனக்கு முன்னாள் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்றின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் நித்து. இதன் காரணமாக, நித்துவை அங்கிருந்த போலீசார், போதையில் தொடர்ந்து வண்டி ஓட்ட வேண்டாம் என கூறியுள்ளனர். போலீசார் அனுமதிக்காததால், அவர்களுடன் மல்லுக்கட்டி நித்து தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, டி.எஸ்.பி துரை பாண்டியன் அங்கு வந்து இளம்பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மது போதையில் இருந்த நித்து, தான் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் 'நீங்கள் யார் என்னிடம் விசாரணை செய்ய?' எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது ஜீப்பின் மீது ஏறி, கால் மேல் கால் போட்டுக் கொண்டு, பின்பும் போலீசாரிடம் வந்து தன்னை போலீஸ் நிலையம் அழைத்து செல்லுமாறு பிடிவாதம் பிடித்துள்ளார்.

தான் தமிழ்நாட்டுக்கு வந்தது தவறு என்றும், இனிமேல் தமிழ்நாடு வர மாட்டேன் என்றும் கத்தியுள்ளார். அதன் பின்னர், நித்துவின் நண்பர்களை போலீசார் அங்கு வரச் செய்தனர். நண்பர்கள் வந்து சமாதானம் செய்ய முயற்சித்த போதும் அந்த பெண் சமாதானம் ஆகாமல், மல்லுக் கட்டியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, அந்த பெண்ணை அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நண்பர்களிடம் போலீசார் தெரிவித்த நிலையில், அவர் ஓட்டி வந்த ஜீப்பை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

மற்ற செய்திகள்