‘காதலுக்கு தடையாக இருந்த சாதி’... ‘இளம்பெண் எடுத்த முடிவு’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதலுக்கு சாதி தடையாக இருந்ததால், விடுதி அறையில் செவிலியரான இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘காதலுக்கு தடையாக இருந்த சாதி’... ‘இளம்பெண் எடுத்த முடிவு’!

சென்னை விருகம்பாக்கம் விநாயகம் தெருவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்து, செவிலியர் வேலைப் பார்த்து வந்தவர் 19 வயதான விஜயலட்சுமி. இந்நிலையில், விஜயலட்சுமி தங்கியிருந்த விடுதியின் அறை, வெகு நேரமாகியும் இன்று திறக்கப்படாததால், பக்கத்து அறையில் இருந்தவர்கள், விடுதியின் பொறுப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால், அறைக் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி பொறுப்பாளர், உடனடியாக, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த, விருகம்பாக்கம் போலீசார் விஜயலட்சுமியின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், நடத்திய விசாரணையில், விஜயலட்சுமியின் காதலுக்கு சாதி தடையாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்த அவர், தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காதலனிடம் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், விஜயலட்சுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

எப்பொழுதும், எந்த பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதே மனநல ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.  மனவருத்தத்தில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கென, அரசு முதல் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் வரை இலவசமாக ஆலோசனைகள் தருகின்றன. *TN Govt. Medical Helpline - 104, Sneha (Suicide Prevention) Helpline - 044-24640050, Child Helpline - 1098*.

SUICIDE, CHENNAI