'6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம்'... 'புதுமாப்பிள்ளைக்கு என்ன நடந்தது'?... 'விலகாத மர்மம்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தருமபுரி அருகே 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம்'... 'புதுமாப்பிள்ளைக்கு என்ன நடந்தது'?... 'விலகாத மர்மம்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஒட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. 24 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கும்மனூர் அருகே புதுமாப்பிள்ளை விஜி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பஞ்சப்பள்ளி போலீசார், விஜியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விஜியின் மர்ம மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருமணமான ஆறே மாதத்தில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்