'மரத்தின் அடியில் கிடந்த செல்ஃபோன், லேப்டாப்’... ‘கோவில் வளாகம் அருகே’... ‘இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு’... ‘சென்னையில் நடந்த சோக சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை வியாசர்பாடியில் கோவில் வளாக மரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'மரத்தின் அடியில் கிடந்த செல்ஃபோன், லேப்டாப்’... ‘கோவில் வளாகம் அருகே’... ‘இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு’... ‘சென்னையில் நடந்த சோக சம்பவம்’!

வியாசர்பாடி பி.வி.காலனி 1-வது தெருவில் உள்ளது பிரசித்தி பெற்ற பீலி முனீஸ்வரன் கோவில். இந்த கோவில் வளாகத்தின் அருகே உள்ள மரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப் பதாக நேற்று அதிகாலை அப்பகுதி மக்கள் எம்.கே.பி.நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, மரத்தின்கீழ் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் செல்ஃபோன், லேப்-டாப் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடந்தது. அதனை எடுத்து போலீசார் பார்த்தபோது, அந்த இளைஞர் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரைச் சேர்ந்த பரிமனம் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும், அவர் என்ஜினீயரிங் படித்து விட்டு, சென்னை வியாசர்பாடியில் வந்து தங்கி, அங்குள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதும் உறுதியானது. இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

CRIME, SUICIDEATTEMPT, JOBS, CHENNAI, DEAD