'ஒண்ணு சேர்த்த பேஸ்ஃபுக்'...'பெத்தவங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை'... 'திருமணத்தில் முடிந்த காதல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முகநூல் மூலம் பழகி, இளைஞர் ஒருவர் திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

'ஒண்ணு சேர்த்த பேஸ்ஃபுக்'...'பெத்தவங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை'... 'திருமணத்தில் முடிந்த காதல்'!

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தா. திருநங்கையான இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகி வந்த இருவருக்கும் நாளடைவில் காதல் மலர்ந்தது. மும்பையில் சினிமா படத்திற்கு ‘செட்’ அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் லட்சுமணன், தனது காதல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து  பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க இருவரின் திருமணமும், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று நடைபெற்றது. இதனிடையே தங்களது திருமணம் குறித்து பேசிய மணமகன் லட்சுமணன் '' கடந்த ஒரு வருடமாக நாங்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தோம். எனது காதல் குறித்து பெற்றோரிடம் கூறிய போது முதலில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் மனம் தளராமல் அவர்கள் சம்மதம் என்ற வார்த்தையை கூறும் வரையில் அவர்களை சமாதனம் செய்து பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது.

நாங்கள் கோவிலில் திருமணம் செய்வதற்கு, கோவில் அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து, அனுமதி பெற்று கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். இதனிடையே பி.எஸ்சி படித்துள்ள அமிர்தா தற்போது கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக படித்து வருகிறார். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இளைஞர் திருநங்கையை திருமணம் செய்து கொண்டது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

CUDDALORE, FACEBOOK, TRANSGENDER, MARRIED