'இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்'... 'இளைஞரின் அதிர்ச்சி செயல்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியில் நடந்த இளம்பெண் கொலையில் தென்காசி நீதிமன்றத்தில், இளைஞர் ஒருவர் சரண் அடைந்துள்ளார்.
தூத்துக்குடி மில்லர்புரம் பாரதி நகர் 5–வது தெருவைச் சேர்ந்தவர் 34 வயதான நடேஷ். இவர் உடன்குடி அருகே உள்ள கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும், அனல்மின் நிலையத்தில் என்ஜினீயராக உள்ளார். இவருடைய மனைவி 28 வயதான மகாராணி இவர்களுக்கு 5 வயதில் விம்ரித் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமையன்று, காலையில் நடேஷ் வேலைக்கு சென்றுவிட, மகாராணி தனது மகனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விட்டு வீட்டில் தனியாக இருந்தார்.
மதியம் 1 மணி அளவில் அருகே உள்ள ராஜீவ்நகரில் வசித்து வரும் மகாராணியின் தந்தை உலகமுத்து தனது மகளை பார்க்க சென்றார். அப்போது, அங்கு மகாராணி அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், கொலை நடந்த அன்று தூத்துக்குடி அரிராம்நகர் 2–வது தெருவை சேர்ந்த, 21 வயதான இளவரசன் என்பவர் மகாராணி வீட்டுக்கு வந்து சென்று இருப்பது தெரியவந்தது.
மேலும் இளவரசனுக்கும், மகாராணிக்கும் கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் போலீசார் இளவரசனை தீவிரமாக தேடி வந்தநிலையில், அவர் தென்காசி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். "என்கூட பேசுறது மகாராணியின் கணவருக்கு தெரிஞ்சு போச்சு. அதனால் மனைவியை கண்டித்து இருக்கிறார். அவரின் பேச்சை கேட்டு கொண்டு, என்கூட மகாராணி பேசவே இல்லை. அந்த ஆத்திரத்தில்தான், அவரை வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொன்னுட்டேன்" என்று இளவரசன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.