AUDIO: இளம் பெண்களுடன் ’பார்ட்னர்ஷிப்’ யோகா...! சென்னையில் சென்டர், சீன நாட்டில் ஆஃபிஸ்...! 1000 பேரை சீரழித்த ‘யோகா’ மாஸ்டர் - பகீர் பின்னணி! வைரலாகும் ஆடியோ!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை சேர்ந்த போலி யோகா மாஸ்டர் செய்துள்ள காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட யோகராஜ் என்பவர் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். அதோடு, யோகராஜ் சென்னை தியாகராய நகரில் யோகா நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், யோகா மையம் வரும் பெண்களை யோகராஜ் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வீடியோ எடுத்து மிரட்டுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளது.
ஆறு மாதகாலம் நடந்த விசாரணையில் சாமியார் போல வேடமிட்ட யோகராஜ் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் சுமார் ஆயிரக்கணக்கான பெண்களை சீரழித்துள்ளது குறித்தான ஆதாரம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
தியான மையத்திற்கு வரும் பெண்களை மயக்கி, அவர்களுக்கு தெரியாமல் பாலியல் ரீதியான வீடியோ எடுத்து மிரட்டி தன் ஆசைக்கு பணிய வைத்துள்ளார் இந்த சாமியார் போர்வையில் இருந்த ஆசாமி.
அதோடு, இவர் மேல் கோயம்பத்தூர், திருப்பூர், மும்பை நகர போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை மறைக்க மும்பை போலீசாருக்கு 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்த சம்பவமும் தற்போது வெளிவந்துள்ளது.
மேலும், யோகராஜ் சீனாவை சேர்ந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்துள்ளார். தன் மனைவியையும் ஆபாச வீடியோ எடுத்த நிலையில் அந்த சீனப்பெண் யோகராஜை விவாகரத்து செய்துள்ளார். அதோடு, தற்போது சீனாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் யோகராஜ் 6 மாத காலமாக யாரிடம் என்ன பேசினார் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஆதாரமாக சேமித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்