ஷாக் ரிப்போர்ட்... மருந்துகளை 'அதிக' விலைக்கு விற்க... மருத்துவர்களுக்கு 'அனுப்பப்படும்' இளம்பெண்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, இளம்பெண்கள் மருத்துவர்களுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவர்களுக்கு பரிசு வழங்கியது உள்ளிட்ட விற்பனை மேம்பாட்டு செலவினங்களை தங்கள் வருமானத்தில் இருந்து தள்ளுபடி செய்யக் கோரி, மருந்து உற்பத்தி நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், கிருபாகரன் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மருத்துவர்களுக்கு தங்க நகைகள், ரொக்கப்பணம், கிரெடிட் கார்டு, இளம்பெண்கள் மற்றும் இன்பச்சுற்றுலா ஆகியவற்றை மருத்துவ நிறுவனங்கள், மருத்துவர்களுக்கு வழங்குவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை மீறிய செயல் என்றும், இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத்துறைச் செயலர், மருந்துப் பொருட்களின் விலை நிர்ணய ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 20-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்