‘10 வருச பழக்கம்’.. ஆணாக மாறிய பெண்ணை ‘கல்யாணம்’ செய்த இளம்பெண்.. அதிர்ச்சியில் பெற்றோர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்த பெண் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு 21 வயது இளம்பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில் ஒரு வகை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தன்னை திருநம்பியாக மாற்றிக் கொண்டார்.
இதனிடையே நட்பாக பழகி வந்த தோழிகள் இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். இதனை அடுத்து கடந்த 8-ம் தேதி இருவரும் திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த விஷயம் திருநம்பியை திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தனது மகளை மீட்க முயற்சி செய்தனர்.
பெற்றோர் தங்களை தேடுவதை அறிந்த இருவரும் திருப்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து இளம்பெண் மற்றும் திருநம்பியை போலீசார் விசாரித்தனர். அப்போது தாங்கள் இருவரும் விரும்பி தான் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரின் பெற்றோரையும் வரவழைத்து போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்