"என்ன எப்படியாச்சும் காப்பாத்துங்க".. காணாமல் போன பெண்ணின் கண்ணீர் வீடியோ!!.. விசாரணையில் தலைகீழாக மாறிய சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிலோமினா. இவரது மகள் பிரவீனா.
Also Read | துபாயில் திறக்கப்பட்ட இந்து கோவில்.. வீடியோ பாத்துட்டு ஆனந்த் மஹிந்திரா சொன்ன விஷயம்.. வைரல்!!
பல்லடம் மங்கலம்துபாயில் திறக்கப்பட்ட இந்து கோவில்.. வீடியோ பாத்துட்டு ஆனந்த் மஹிந்திரா சொன்ன விஷயம்.. வைரல்!! சாலை அருகே அழகு நிலையம் ஒன்றையும் பிரவீனா நடத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இவருக்கு திருமணமாகி பெண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிரவீனாவின் கணவர் சேகர் வெளிநாட்டில் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், அழகு நிலையத்திற்கு அடிக்கடி வரும் பல்லடம் வேலப்ப கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவருடன் பிரவீனாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம், தமிழ்செல்வியின் கணவர் சிவகுமாரும் பிரவீனாவுக்கும் அறிமுகமாகி உள்ளார். இதனிடையே, திடீரென பிரவீனா மாயமானதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்நது, தனது மகளை கண்டுபிடித்து தருமாறு பிரவீனாவின் தாயார் பிலோமினா போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், பிரவீனாவையும் போலீசார் தேடி வந்துள்ளனர். இதனிடையே, பிரவீனா கண்ணீர் மல்க பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் பரபரப்பை கிளப்பி இருந்தது. அதில் பேசும் பிரவீனா, டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என சொல்லி தனது பெயரில் உள்ள வீட்டு பாத்திரத்தை வாங்கிய சிவகுமார், அதை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கியதாகவும், பத்திரம் ஏலத்திற்கு வந்த போது பணத்தை திருப்பி கேட்க முயன்றதால், தொழில் விஷயமாக என்னை வெளியூர் அழைத்து வந்து திருச்சி பகுதியில் அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டதாகவும் பிரவீனா குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தன்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாற்றுங்கள் என்றும் பிரவீனா கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். பிரவீனாவை போலீசார் தேடி வந்த மறுபக்கம், இந்த வீடியோ கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து, போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரவீனா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை மீட்ட போலீசார், பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது நடந்த விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம், பிரவீனா, சிவகுமார் மற்றும் அவரது மேலாளர் தமிழரசு ஆகிய மூவரும் தொழில் பார்ட்னர் ஆக்கிக் கொள்வதாக கூறி, 2 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக, கோவை தொழிலதிபர் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
இதன் பின்னர், பிரவீனா, சிவகுமார் மற்றும் தமிழரசு ஆகிய மூவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்த காவல்துறை, பிரவீனா மற்றும் சிவகுமார் ஆகியோரை கைது செய்தனர். பெண் அழுது வெளியிட்டிருந்த வீடியோ கடும் பதற்றத்தை உண்டு பண்ணி இருந்த நிலையில், பின்னர் தெரிய வந்த உண்மை அப்படியே ட்விஸ்ட் அடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்