5-வது திருமணத்தில் சிக்கிய பெண்.. கொத்தாக தூக்கிய 4 கணவர்கள்.. "ஆனா அதுக்கு அப்றம் ஒரு ட்விஸ்ட் நடந்தது பாருங்க"
முகப்பு > செய்திகள் > தமிழகம்நான்கு பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் ஒருவர், ஐந்தாவதாக திருமணம் செய்ய முயன்ற போது சிக்கிய நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை அடுத்த கஸ்பாவை சேர்ந்த பெண் ஒருவர், கரும்பூர் என்னும் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, கஸ்பா பகுதியில் உள்ள பாபு என்பவரையும், இதற்கு அடுத்தபடியாக சண்முகசுந்தரம் மற்றும் அசோகன் உள்ளிட்டோரையும் அடுத்தடுத்து அந்த பெண் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே வேளையில், இத்தனை பேரை திருமணம் செய்து கொண்ட விஷயம், ஒருவருக்கு ஒருவர் தெரியாமலும் அந்த பெண் பார்த்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அதே வேளையில், தனித்தனித்தனியாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்த அவர், ஒவ்வொருவரிடம் இருந்து 10 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் வரை தனது கணவரிடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழ்நிலையில், ஐந்தாவதாக மாதனூர் பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய அந்த பெண் முயன்றுள்ளார். அந்த சமயத்தில் தான், அவரது திருமணம் குறித்து நான்கு கணவர்களுக்கும் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்கு பேரும் தனித்தனியாக பெண் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார்கள் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த விசாரணையில், நான்கு போரையும் திருமணம் செய்து கொண்டதை அவர் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், அந்த பெண் திருமணம் செய்து கொண்ட நான்கு பேரும் தங்களிடம் இருந்து பெற்ற நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருப்பி கொடுத்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கும் அவர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், அடுத்த ஒரு சில மாதத்திற்குள் நகை மற்றும் பணத்தை தயார் செய்து நான்கு கணவர்களிடமும் கொடுத்துள்ளார். தொடர்ந்து, ஐந்தாவதாக திருமணம் செய்வதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பணம் மற்றும் நகை கிடைத்ததால், திரும்பி அந்த பெண் மீது புகார் எதுவும் அளிக்காமல், நான்கு பேரும் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, அதே பெண்ணையும் போலீசார் விடுவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்