சொல்லச்சொல்ல கேட்காம... 3 தங்கச்சியும் 'லவ் மேரேஜ்' பண்ணிக்கிட்டாங்களே... அடுத்தடுத்து நடந்த 'விபரீதங்களால்' அதிர்ந்து போன திருச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தங்கைகள் மூன்று பேரும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அண்ணன் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(60). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி(50). இவர்களுக்கு பால்ராஜ்(26), சின்னத்துரை(24) என இரண்டு மகன்களும் மீரா(30), கல்பனா(23), மீனா(21) என மூன்று மகள்களும் உள்ளனர். பால்ராஜ் சென்னையில் எலக்ட்ரீசியனாகவும், சின்னதுரை மற்றும் மீனா ஆகியோர் ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். மீரா, கல்பனா ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதேபோல மீனாவும் ஒருவரை காதலித்ததாக தெரிகிறது. ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்த பால்ராஜ் இதையறிந்து கண்டித்து இருக்கிறார். நம் வீட்டில் ஏற்கனவே இரண்டு பேர் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதனால் நீயாவது வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள் என கண்டித்து இருக்கிறார். ஆனால் மீனா கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறி தான் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் அதிர்ந்து போன பால்ராஜ் அப்பகுதியில் உள்ள மரமொன்றில் நேற்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மகன் இறந்த துக்கத்தில் இருந்த நீலாவதி விரக்தியில் நேற்று அதிகாலை வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நீலாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகன் இறந்த துக்கத்தில் தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்