"ஐயா..".. சாலையில் உருக்கமாக கத்திய பெண்.! சட்டென காரை நிறுத்தி விசாரித்த முதல்வர் போட்ட நெகிழ்ச்சி உத்தரவு.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் காமராஜர் சேலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் கூக்குரலிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read | 2 பெண்கள், 8 குழந்தைகளுடன்.. ஒரே வீட்டில் வாழும் நபர்.. அடுத்ததா போட்டுள்ள பிளான்.. வைரல் பின்னணி!!
சென்னை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பெண்மணி சத்யா. இவருடைய கணவர் ராஜா. இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தீனா என்கிற பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து சில மாதங்களில் இவர்களுக்கு இடையில் தகராறு எழுந்துள்ளது. மேலும் இதுபற்றி சத்யா தம்முடைய மனுவில் குறிப்பிடும் பொழுது, ராஜா தம்மை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், இதனை தொடர்ந்து ராஜாவின் அம்மா சுலோச்சனா தன்னுடைய மகனை தட்டி கேட்டதாகவும் ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் ராஜா தொடர்ந்து தம்மை சித்திரவதை செய்ததாகவும் சத்யா குறிப்பிட்டு இருக்கிறார்.
அத்துடன் ராஜா வேறொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ தொடங்கியதாக குற்றம் சாட்டியிருக்கும் சத்யா, தனியாக வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வரும் ராஜா தங்கள் பெண் குழந்தை தீனாவை அவருடன் அழைத்துச் சென்று விட்டதாகவும், தன் மகளை திருப்பி கேட்ட போதெல்லாம் தன்னை தாக்கியதுடன் குழந்தையை எல்லாம் திரும்பி தர முடியாது என்று மிரட்டதாகவும் சத்யா உருக்கமாக தம்முடைய மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே ராஜாவின் தயார் சுலோச்சனா தன் மகன் ராஜாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டு மருமகள் சத்யாவை வீட்டில் வைத்து கவனித்து வந்திருக்கிறார். ஆனால் இப்படி தன்னுடைய மருமகளுக்கு ஆதரவாக இருந்த சுலோச்சனா சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் காலமாகிவிட்டார். சுலோச்சனாவின் கணவரும் காலமாகிவிட்ட நிலையில் தனியாக இருந்த சத்யாவை மீண்டும் வீட்டுக்கு வந்த ராஜா மிரட்டி, அவரை வீட்டை விட்டு அடித்து துரத்தியதுடன் அதே வீட்டில் வேறொரு பெண்ணுடன் வசிக்க தொடங்கி விட்டதாகவும் ராஜாவின் மனைவி சத்யா குற்றம் சாட்டியிருக்கிறார்.
குழந்தையை தன்னிடமிருந்து பிடுங்கிக் கொண்ட நிலையில், தமக்கு ஆதரவாக இருந்த மாமியார் மறைந்து விட்ட நிலையில், தங்குவதற்கு வீடு வாசல் இன்றி தம்மை தம் கணவர் துரத்தி விட்ட நிலையில், மணவாழ்க்கையில் தனக்கு துரோகம் செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் கணவர் வாழ்ந்து வரும் நிலையில், வேறு வழியின்றி ராஜாவின் மனைவி சத்யா ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி சென்னையில் காமராஜர் சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தம் கான்வாய் காரில் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரம் நின்று கொண்டிருந்த சத்யா பெருங்குரல் எடுத்து ஐயா என்று கண்கலங்க கூக்குரலிட்டு அழைத்தார்.
இதனால் அங்கிருந்து அதிகாரிகளும் முதல்வர் ஸ்டாலின் பக்கம் திரும்பி பார்க்க, முதல்வரும் காரை நிறுத்தி சத்யாவை வரச் சொல்லி நடந்தது பற்றி வினவினார். அப்போது முதல்வரிடம் தம்முடைய நிலையை விளக்கிய சத்யா, தம் கையில் இருந்த மேற்கண்ட விஷயங்கள் எழுதப்பட்ட மனுவை முதல்வரிடம் வழங்கினார். அந்த மனுவை ஏற்று, உதவியாளரிடம் கொடுத்த முதல்வர் உடனடியாக மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன் குழந்தயை மீட்டு தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.
Also Read | திருமணமாகி 3 மாசத்தில் கணவருக்கு ஸ்லோ பாய்சனா.?. தமிழகத்தை உலுக்கிய மனைவியின் வாட்ஸ் அப் சாட்.!
மற்ற செய்திகள்