ஒரு வாரமா வீட்டுக்குள்ள இருந்து துர்நாற்றம்.. சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர்.. விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு அருகே உயிரிழந்த கணவர் மற்றும் தாயின் சடலங்களுடன் ஒரு வார காலம் தனிமையில் வசித்து வந்திருக்கிறார் பெண்மணி ஒருவர். இது அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு வாரமா வீட்டுக்குள்ள இருந்து துர்நாற்றம்.. சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர்.. விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள்..!

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | இவருக்கு அங்கீகாரம் கிடைக்கணும்.. இளைஞரின் வித்தியாசமான முயற்சி.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருடைய கணவர் மோகன சுந்தரம். 74 வயதான மோகன சுந்தரம் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். பின்னர் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்று வீட்டிலேயே இருந்திருக்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் சரவண குமார் மனவளர்ச்சி குன்றியவர்.

இருப்பினும் மகள் சசிரேகா வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்திருக்கிறார். ஆனால், திருமணமாகி சசிரேகா தனது கணவருடன் காங்கேயத்தில் குடியேறியுள்ளார். இதனால் அன்றாட செலவுகளுக்கே சாந்தி மிகுந்த சிரமப்பட்டு வந்திருக்கிறார். மோகன சுந்தரத்திற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படவே அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று வந்திருக்கின்றனர் இந்த தம்பதியர். ஆனால், கொடும் வறுமையில் சிக்கிய குடும்பம் சாப்பாட்டிற்கே சிரமப்பட்டு வந்திருக்கிறது.

Woman stay with her husband and mother bodies at home

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக சாந்தியின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். இதனையடுத்து அங்கே விரைந்து வந்த போலீசார் நிலைமையை அறிந்து சுகாதார பணியாளர்களுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். அப்போது தான் மோகன சுந்தரம் மற்றும் சாந்தியின் தாய் கனகாம்பாள் ஆகியோர் சடலமாக வீட்டுக்குள் இருந்தது தெரியவந்திருக்கிறது.

Woman stay with her husband and mother bodies at home

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து இரு சடலங்களையும் மீட்ட பணியாளர்கள் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அடக்கம் செய்ய பணம் இல்லாததால் மரணமடைந்த கணவர் மற்றும் தாய் ஆகியோருடைய சடலங்களுடன் வசித்து வந்ததாக சாந்தி கூறியிருக்கிறார். இது ஈரோடு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | காதலிக்கு 'காதலர் தின' GIFT கொடுக்க இளைஞர் செய்த தகிடுதத்தம்.. கையோடு போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!

WOMAN, STAY, HUSBAND, MOTHER, HOME

மற்ற செய்திகள்