'ஹவுஸ் ஓனர் வீட்டு திருமண நிகழ்ச்சி!'.. வாடகைக்கு குடியிருக்கும் பெண், தூங்கும் நேரம் பார்த்து வீடு புகுந்த நபர்.. சென்னையில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அரும்பாக்கம் பகுதியில் 31 வயது பெண் ஒருவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டு முன்னே வாடகை வீட்டில் குடியிருந்தவர் ஓட்டுநர் முருகானந்தம் என்கிற 49 வயது நபர். தற்போது அமைந்தகரையில் உள்ள முரளிதரன் தெருவில் வாடகைக்கு குடியிருந்து வரும் இவர், நேற்றைய தினம், அப்பெண்ணின் பகுதியில் நிகழ்ந்த, அப்பெண்ணின் வாடகை வீட்டு உரிமையாளரின் குடும்ப திருமணத்துக்கு வருகை தந்துள்ளார்.
அதே சமயம், அந்த பெண் காற்று வாங்குவதற்காக கதவைத் திறந்து தூங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது வீடு புகுந்த முருகானந்தம் அப்பெண்ணை பலவந்தமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியுள்ளார். இதனை அடுத்து அப்பெண் அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முருகானந்தம் கைது செய்யப்பட்டார்.
மற்ற செய்திகள்