‘எப்படி இவ்ளோ நகை, பணம் கெடச்சது?’.. கணவன் சொன்ன பதிலை கேட்டு ‘ஷாக்’ ஆன மனைவி.. உடனே செஞ்ச சிறப்பான காரியம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கணவர் திருடி வந்த நகைகளை எடுத்து மனைவி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘எப்படி இவ்ளோ நகை, பணம் கெடச்சது?’.. கணவன் சொன்ன பதிலை கேட்டு ‘ஷாக்’ ஆன மனைவி.. உடனே செஞ்ச சிறப்பான காரியம்..!

Also Read | ‘தன் காதலனை காதலித்த வேறொரு பெண்?’.. விஷயம் தெரிஞ்சு முன்னாள் காதலனுடன் சேர்ந்து பெண் செஞ்ச காரியம்.. சென்னையில் பரபரப்பு..!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த கோட்டக்குப்பம் அமிர்தா கார்டனை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நசீமா (வயது 53). இவர் தற்போது தனது தாயுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு நசீமா தனது தாயுடன் வெளியில் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 22 பவுன் நகை, ரூ.8000 பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து இது தொடர்பாக காவல் நிலையத்தில் நசீமா புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், நசீமா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நசீமா வீட்டில் திருடியது, சின்னகோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் (வயது 38) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை பிடிக்க போலீசார் விரைந்தனர்.

Woman return jewelry to owner by stolen her husband

இதனிடையே அர்ச்சுனன் தான் திருடிய நகை மற்றும் பணத்தை தனது மனைவி அன்பரசியிடம் கொடுத்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அன்பரசி, எப்படி இவ்வளவு நகை, பணம் கிடைத்தது என கணவரிடம் விசாரித்தார். அப்போது அவர் நசீமா வீட்டில் திருடியதாக தெரிவித்தார். இதனை அடுத்து கணவர் கொடுத்த 22 பவுன் நகை, ரூ.8000 பணத்தை நசீமாவின் வீட்டிற்கே சென்று அன்பரசி ஒப்படைத்தார்.

தனது கணவர் மதுபோதையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அதற்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் கூறி கதறி அழுதார். அன்பரசியின் நேர்மையை கண்டு நெகிழ்ந்த நசீமா, காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார். கணவர் திருடிய நகை, பணத்தை அவரது மனைவி உரியவரிடம் தேடிச் சென்று ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | என்னது ‘லிப்ஸ்டிக்’ தாவரமா..! இந்தியாவில் 100 வருசத்துக்கு அப்புறம் கண்டுபிடிப்பு.. எங்கே தெரியுமா..?

WOMAN, JEWELRY, OWNER, HUSBAND, நகை, மனைவி, கணவன்

மற்ற செய்திகள்