VIDEO: ‘மேடம் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது’!.. கேள்வி கேட்டு ஸ்டாலினை ‘டென்ஷனாக்கிய’ பெண்.. திமுக ‘கிராமசபை’ கூட்டத்தில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி பெண் ஒருவர் சலசலப்பை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது மக்களிடம் ஸ்டாலின் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் திடீரென எழுந்த பெண் ஒருவர் ஸ்டாலினை நோக்கி ‘ஏன் கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள்?’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின் ‘இடையே கேள்வி கேட்க வேண்டும்’ எனக் கூறி அப்பெண்ணை அமருமாறு கூறினார்.
ஆனால் அந்த பெண் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பேசிய ஸ்டாலின், ‘மேடம் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. உங்களை அமைச்சர் வேலுமணி அனுப்பி வைத்திருக்கிறார்’ என கூறினார். பின்னர் அப்பெண்ணை வெளியேறுமாறு ஸ்டாலின் கூறினார். இதனை அடுத்து திமுக மகளிரணி செயலாளர்கள் போலீசாரின் உதவியுடன் அப்பெண்ணை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சலசலப்பை ஏற்படுத்திய பெண் சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (4) என்பதும், அதிமுக மாவட்ட மகளிர் பாசறை அணியின் துணை தலைவராக இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மற்ற செய்திகள்