‘அம்மாவ பாக்க வரேன்னு சொன்னியே.. ஏன்டா வரல?’.. நெஞ்சைப் பிழிந்த பெண்ணின் கதறல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நேற்று முன் தினம் 9.30 மணி அளவில் பெங்களூரிலிருந்து, எர்ணாகுளம் நோக்கி 48 பயணிகளுடன் கிளம்பி வந்துகொண்டிருந்த  கேரள அரசு சொகுசுப் பேருந்து  திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கொச்சியில் இருந்து சேலம் நோக்கி டைல்ஸ் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் பேருந்தின் ஒருபுறம் சுக்குநூறாக நொறுங்கியதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலி ஆனார்கள்.

‘அம்மாவ பாக்க வரேன்னு சொன்னியே.. ஏன்டா வரல?’.. நெஞ்சைப் பிழிந்த பெண்ணின் கதறல்!

கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படும் நிலையில், இந்த சம்பவத்தை அடுத்து 20 ஆம்புலன்ஸ்கள், கலெக்டர்கள், பிற மாநில எம்.பிக்கள், தமிழக அமைச்சர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது உயிரிழந்தவர்களின் பெற்றோர் தலையில் அடித்துக்கொண்டு கதறியபடி வந்தனர்.

அதில், ‘உன்னி  நீ என் ஜீவனடா .. திரும்பி வந்துடறா!... அம்மாவை பாக்குறதுக்கு வரேன்னு சொன்னியே... ஏண்டா வரலை?’ என்று கதறியபடி வந்த பெண்மணியின் தழுதழுத்த குரல், அங்கிருந்தவர்களின் உயிரைப் பிழிந்தது. பின்னர் ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒவ்வொரு சடலமும் ஏற்றப்பட்டு அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்து அனுப்பி வைக்கப்பட்டது. தூக்கத்தில் இருந்த பலர் விபத்து நடந்ததே தெரியாமல் உயிரிழந்ததாகவும், அவர்களிடம் இருந்து எவ்வித அழுகையோ கதறலோ பெரிதாக வரவில்லை என்றும் காயமடைந்தவர்கள் கூறியுள்ளனர்.

COIMBATORE, TIRUPURACCIDENT