'சண்ட போட்டு சலிச்சு போச்சு'... மனைவியை ரிவெஞ்ச் எடுக்க... கணவன் செய்த காரியம்... போலி சான்றிதழ் விவகாரத்தால்... மதுரையில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

போலி சாதி சான்றிதழ் மூலம் அரசு பணியில் சேர்ந்த மனைவியை, கணவரே வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'சண்ட போட்டு சலிச்சு போச்சு'... மனைவியை ரிவெஞ்ச் எடுக்க... கணவன் செய்த காரியம்... போலி சான்றிதழ் விவகாரத்தால்... மதுரையில் பரபரப்பு!

மதுரை பரசுராம்பட்டியைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவருக்கும், கமலா என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கமலா மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இருவரும் விவாகரத்திற்காக நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அரசுப் பணியில் இருப்பதால்தான், மனைவி தன்னை மதிக்கவில்லை என்று எண்ணிய லாரன்ஸ், அரசுப் பணியில் கமலா சேர்ந்தது தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார்.

அப்போது, 1993ம் ஆண்டு மதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில், கிறிஸ்தவ மதத்தில் ஒரு பிரிவுக்கு சாதி சான்றிதழை பெற்றுவிட்டு, அதே வருடம் நவம்பரில் பட்டியலின வகுப்புக்கான சான்றிதழையும் கமலா பெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது.

மேலும், இடஒதுக்கீட்டில் அரசுப் பணியை பெறுவதற்காக ஏராளாமானோர் போலி சான்றிதழ் பெற்று அரசுப் பணியில் சேர்ந்திருப்பதாகவும், அது குறித்தான முழுமையான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் லாரன்ஸ் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

JOBS, FAKE, CERTIFICATE, GOVT