‘விரட்டிய மக்கள்’.. மனநலம் பாதித்தவரின் மானம் காத்த தேவதை.. குவியும் பாராட்டு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஒட்டு துணி இல்லாமல் சாலையில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பெண் ஒருவர் ஆடை அணிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘விரட்டிய மக்கள்’.. மனநலம் பாதித்தவரின் மானம் காத்த தேவதை.. குவியும் பாராட்டு..!

திருநெல்வேலியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான நந்தினி, நெல்லை-மதுரை நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது கங்கைகொண்டான் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் உடலில் ஒட்டுத்துணி இன்றி நடந்து சென்றுள்ளார். அப்போது ஆண் சிலர் அவரை விரட்டி விட்டுள்ளனர்.

Woman helped mentally challenged man in Tirunelveli

இதைப் பார்த்த நந்தினி, உடனே தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த சால்வையை எடுத்து சென்று, அவரது இடுப்பில் கட்டி விட்டார். மேலும் அருகில் உள்ள கடைக்கு சென்று உணவு வாங்கி வந்து அவருக்கு ஊட்டியும் விட்டார்.

Woman helped mentally challenged man in Tirunelveli

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உறவினர்களே கைவிடும் இந்த காலகட்டத்தில், ஒட்டுத்துணி இல்லாமல் சாலையில் திரிந்தவருக்கு சால்வையை கட்டிவிட்டு, உணவும் வாங்கிக் கொடுத்த நந்தினிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற நபர்களால் தான் மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

TIRUNELVELI, WOMAN

மற்ற செய்திகள்