Darbar USA

விமான நிலையத்தில் வேலை... '1 கோடி ரூபாய் மோசடி'... பெண் ஊழியர் விபரீத முடிவு... சென்னையில் பயங்கரம்!...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, ஒரு கோடியே 62 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டதாகக் கூறி, ஏர் இந்தியா பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் வேலை... '1 கோடி ரூபாய் மோசடி'... பெண் ஊழியர் விபரீத முடிவு... சென்னையில் பயங்கரம்!...

சென்னை விமான நிலைய உள்நாட்டு சரக்கு முனையத்தில், ஏர் இந்தியாவின் மேற்பார்வை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார், மோகனன். அதே ஏர் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்கிறார், டிம்பிள் சியா. கடந்த ஜனவரி மாதம், டிம்பிளின் நண்பர் ஒருவருக்கு மோகனன் 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், தனது காதலன் விக்னேஷ் என்பவருக்கு, பணி கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு மோகனனிடம் டிம்பிள் தெரிவித்துள்ளார். முதலில் 20 லட்சம் ரூபாய், கொடுத்தால் ஏர் இந்தியாவில் டெர்மினல் மேலாளர் பணி பெற்றக் கொடுப்பதாக மோகனன் கூறியுள்ளார். நாளடைவில், இந்த தொகை 1 கோடியே 62 லட்சம் வரை அதிகரித்து சென்றுள்ளது.

ஒரு கட்டத்தில், மோகனன் பண மோசடி செய்து வேலை வாங்கித் தராததால், விரக்தி அடைந்த டிம்பிள் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததால், டிம்பிள் உயிர் தப்பினார். மேலும், மோகனன் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

இந்த புகார் குறித்து மோகனன் பேசுகையில், தான் இது வரை டிம்பிளிடம் இருந்து ஒரு டீ கூட வாங்கிக் குடித்ததில்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

CHENNAIAIRPORT, SUICIDEATTEMPT, WOMAN, EMPLOYEE