பவர் பேங்கில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசிய இளம்பெண்.. கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல் சத்தம்.. சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பவர் பேங்கில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசிய இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பவர் பேங்கில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசிய இளம்பெண்.. கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல் சத்தம்.. சென்னையில் பரபரப்பு..!

சென்னை, தாம்பரம் அடுத்த திருநீர்மலை சாலையில் அமைந்துள்ள பெண்கள் தங்கும் விடுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கும்கும் குமாரி எனும் இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கும் விடுதியில் குமாரி போன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவர் பவர் பேங்கில் போனை இணைத்தபடி பேசியதாக சொல்லப்படுகிறது.

குமாரி தங்கி இருந்த கட்டிடத்துக்கு அருகே உயர் மின் அழுத்த கம்பி செல்கிறது. போன் பேசிக்கொண்டிருந்த அந்த இளம்பெண், தனது ஆடை மின்சார கம்பி அருகே விழுந்து கிடப்பதை  பார்த்திருக்கிறார். அதனை எடுக்க சென்ற குமாரி அங்கிருந்த கேட்டில் ஏறி நின்று முயற்சிக்கும்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்திருக்கிறது. இதனால் அவரது செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது. மேலும், அங்கு அவருடன் தங்கியிருந்த சேர்ந்த பூனம் (வயது 20), ஊர்மிளா குமாரி (வயது 24) ஆகியோர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

Woman electrocuted while talking in phone admitted in hospital

இதனையறிந்த மின்சார வாரிய ஊழியர்கள் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த மூன்று இளம் பெண்களையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அங்கிருந்து குமாரி மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குமாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விடுதி மேலாளர், கட்டிட உரிமையாளர், விடுதி மேற்பார்வையாளர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CHENNAI, PHONE, ELECTROCUTED

மற்ற செய்திகள்