'பயங்கர' சத்தத்துடன் 'அலறித்துடித்த' பழங்குடி 'பெண்'!.. விறகு எடுக்க போன இடத்தில் 'கணவர்' கண்முன்னே 'மனைவிக்கு' நடந்த 'கோரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்டது கல்ஹல்லா காப்பு காடு.

'பயங்கர' சத்தத்துடன் 'அலறித்துடித்த' பழங்குடி 'பெண்'!.. விறகு எடுக்க போன இடத்தில் 'கணவர்' கண்முன்னே 'மனைவிக்கு' நடந்த 'கோரம்'!

இந்த காட்டுக்குள் வழக்கம்போல் கால்நடைகளை மேய்ப்பதற்கும், விறகு சேகரிக்கவும் குரும்பர்பாடியைச் சேர்ந்தவர்கள் சிலர் சென்றதுடன், வனாந்திரத்தில் விறகு சேகரித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்படி விறகு சேகரித்துக் கொண்டிருந்த கௌரி என்கிற பெண், திடீரென அலறித் துடித்துள்ளார். அந்த சமயம் அந்த பெண்ணின் பக்கம் மற்றவர்கள் திரும்பிப் பார்த்தபோது பெண் புலி ஒன்று அந்தப் பெண்ணை அடித்து புதருக்குள் இழுத்துச் செல்வதைக் கண்டுள்ளனர். சுமார் 200 மீட்டர் தூரம் புதருக்குள் அப்பெண்ணை புலி இழுத்துச் சென்றபோது,

மதியம் சுமார் 12 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தின்போது மக்கள் கூச்சலிட்டதை அடுத்து புலி அந்த பெண்ணை விட்டுவிட்டு ஓடியது. பின்னர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த அப்பெண் பரிதாபமாக இறந்துள்ளார். அப்போது பழங்குடி இனத்தைச் சேர்ந்த அப்பெண்ணின் கணவர் தன் மனைவி கெளரியை புலி,  தாக்கிக் கொன்று இழுத்துச் சென்றதை பார்த்து தவித்துள்ளார். பின்னர் அப்பெண்ணின் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு வனத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

2014 முதல் 2016 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் புலிக்கும் மனிதர்களுக்குமான இந்த வகையான எதிர்க்கொள்ளல் சம்பவங்கள் நீலகிரியில் அதிகரித்தது.  இடைக்காலத்தில் அந்த சம்பவங்கள் ஓய்ந்திருந்த நிலையி, தற்போது மீண்டும் நடக்கத் தொடங்கும் இந்த சம்பவம் மக்களிடம் பெருத்த பயத்தை உண்டாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்