கல்யாணமான ஒரு வாரத்திலேயே பிரிந்து சென்ற மனைவி.. மறுபடியும் சேர்த்து வைக்காத மாமியார்.. ஆத்திரத்தில் மருமகன் செஞ்ச காரியம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனைவியை பிரித்த ஆத்திரத்தில் கணவன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோகிலா (வயது 40). கணவனை இழந்த இவருக்கு ஆர்த்தி என்ற மகளும், வசந்தக்குமார் என்ற மகனும் உள்ளனர்.
இந்த சூழலில், கடந்த 3 வருடங்களுக்கு முன் லாரி பாடிபில்டிங் பட்டறையில் வேலை பார்த்து வரும் கார்த்தி என்பவர், கோகிலாவின் மகள் ஆர்த்தியை ஒரு தலையாய் காதலித்து வந்துள்ளார். இதனை அடுத்து கோகிலாவிடம் இதுகுறித்து தெரிவித்து பெண் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டு மாங்குட்டை பாளையத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், திருமணம் ஆன ஒரு வாரத்தில் கார்த்திக்கு ஜன்னி வந்ததால் பயந்து போன ஆர்த்தி, மீண்டும் தாய் வீட்டிற்கு வந்து விட்டார். மனைவியை பிரிந்து மாங்குட்டைபாளையத்தில் தனியாக வசித்து வந்த கார்த்தி, கடந்த 1 மாதத்திற்கு முன்பு கருவேப்பம்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு அருகிலேயே குடி வந்துள்ளார்.
இதனை அடுத்து தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி மாமியார் கோகிலாவிடம் கார்த்தி தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. நேற்று மாலையும் மாமியாரிடம் கார்த்தி சண்டை போட்டுள்ளார். அப்போது ஆர்த்தி வேலை செய்துவரும் கடைக்குச் சென்று அவரை அழைத்து வர தம்பி வசந்தகுமார் சென்றிருந்தார்.
இதனிடையே மாமியார் கோகிலாவின் தலையில் குழவிக் கல்லால் கார்த்தி தாக்கியுள்ளார்.இதில் படுகாயமடைந்த கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாமியாரை கொன்றுவிட்டு வீட்டு வாசலில் கார்த்தி அமர்ந்திருந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்