ஒன்றரை பவுன் நகைக்காக நடந்த கொடுமை.. பீரோவில் துணியால் சுற்றி கிடந்த உடல்.. பெண் பரபரப்பு வாக்குமூலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி: குளச்சல் பகுதியில் ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்து வைத்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைதான நிலையில், உடந்தையாக இருந்த அவரது கணவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பாத்திமா தெருவைச் சேர்ந்த ஜான் ரிச்சர்டு - சகாய சில்ஜா தம்பதி. இவர்களது 4 வயது மகன் ஜோகன் ரெஜி கடந்த 21ம் தேதி மாயமானான். இதுகுறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. புகாரின்படி போலீசார் அதே தெருவைச் சேர்ந்த பாத்திமா (35) என்பவரிடம் விசாரணை நடத்தியதில், ஒன்றரை பவுன் நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து, நகையை திருடி உடலை பீரோவில் மறைத்து வைத்தது அம்பலமானது. இதனைத்தொடர்ந்து பாத்திமா கைது செய்யப்பட்டார்.
பாத்திமா வாக்குமூலம்
பாத்திமாவிடம் நடத்திய விசாரணையில், கணவர் ஷரோபின் மீன்பிடி தொழில் செய்கிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரின் சம்பாத்யத்தில் போதிய வருமானம் இல்லாததால் உறவினர்கள், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியிருப்பதாக தெரிவித்தார். அதன்படி, வாணியக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த கடன் ரூ.60 ஆயிரத்தை திருப்பி தருமாறு பாத்திமாவிடம் கேட்டுள்ளார். 21ம் தேதிக்குள் கடனை திருப்பி தரவில்லையென்றால் போலீசில் புகார் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
பணம் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்த பாத்திமா, அன்று மதியம் 4 வயது சிறுவன் ஜோகன் ரெஜி தெருவில் விளையாடியதை பார்த்து வீட்டு மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்பு அவனது கழுத்தில் இருந்த செயினை அறுக்க முயன்றபோது கத்தி கூச்சல் போட்டதால், துணியால் வாயை கட்டினேன். பின்னர் கை, கால்களை கட்டி கழுத்தை நெரித்தேன் என்று தெரிவித்தார். சிறுவன் இறந்ததும் அவனது கழுத்தில் இருந்த செயினை கழட்டிவிட்டு உடலை துணியால் சுற்றி, பீரோவுக்குள் வைத்து பூட்டிவிட்டேன் என்றும் மற்றவர்கள் அவனை தேடியபோதும் நானும் தெரியாதது போல் தேடினேன் என்று கூறினார்.
பாக்றதுக்கு எல்லாம் விலையில்லைங்கோ.. கார் ஷோருமில் சேல்ஸ்மேனை சினிமா பாணியில் அதிர வைத்த விவசாயி
கணவர் கைது
அன்றிரவு கணவர் வந்ததும் பாத்திமா நடந்ததை அனைத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் பாத்திமாவை கண்டித்த ஷரோபின், சிறுவன் இறந்தது தெரியாமல் இருக்க உடலை கடலில் வீசிவிடலாம் என்று தெரிவித்துள்ளார். இரவு ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் உடலை கொண்டு செல்ல முடியவில்லை. மேலும், நகையை அடகு வைத்து ரூ.40ஆயிரத்தை வாணியக்குடியை சேர்ந்த பெண்ணிடம் கொடுத்ததன் மூலம் காவல் துறையிடம் சிக்கினேன் என்று பாத்திமா கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் கொலையை மறைத்த குற்றத்திற்காக அவரது கணவர் ஷரோபினையும் போலீசார் கைது செய்தனர்.
மற்ற செய்திகள்