Unknown நம்பரில் இருந்து வந்த வாட்ஸ்அப் வீடியோ கால்.. Attend பண்ண இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாட்ஸ்அப் வீடியோ காலில் இளம்பெண்களை ஆபாசமாக தோன்ற வைத்து இளைஞர்களிடம் பணம் பறிக்கும் கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தெரியாத நம்பரிலிருந்து வாட்ஸ்அப் வீடியோ கால் வந்துள்ளது. நம்பர் புதிதாக இருந்ததால் யார் என தெரியாமல் குழப்பத்துடனேயே அந்த போனை எடுத்து உள்ளார். அப்போது இளம்பெண் ஒருவர் வீடியோ காலில் ஆபாசமாக தோன்றியுள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றுள்ளார். இதனை அந்த பெண் அப்படியே கால் ரெகார்ட் செய்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் அந்த வீடியோவை ஆபாசமாக எடிட் செய்து அந்த இளைஞரின் வாட்ஸ்அப் நம்பருக்கு அப்பெண் அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்த சிறிது நேரத்தில் மற்றொரு எண்ணிலிருந்து ஒரு நபர் அந்த இளைஞரை மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
பணத்தை கொடுக்காவிட்டால் வீடியோவை இணையத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளார். உடனே இதுகுறித்து நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அந்த இளைஞர் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் வீடியோ கால் வந்த நம்பரை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்