Azeem : “எல்லா வீக்கும் நாமினேட் பண்ணாங்க.. ஆனாலும் வீழ்வேனென்று நினைத்தாயோ” - பாரதியார் பாட்டை மேற்கோள் காட்டிய அசிம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே நடந்துள்ளது.
Also Read | 24 வருஷம் ஒரே தட்டில் உண்ட தாய்.. அவரது மறைவுக்கு பின் மகனுக்கு தெரிய வந்த மனம் நொறுங்க வைக்கும் காரணம்!!
நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா, ADK, கதிரவன், அமுதவாணன், மைனா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் ஃபினாலேவில் விக்ரமன் & அசிம் இருவரில் அசிமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, கையை மாற்றி மாற்றி ஆட்டி விளையாட்டு காட்டிய கமல் இறுதியாக அசிம் வெற்றி பெறுவதாக அறிவித்தார்.
வெற்றி பெற்ற அசிம் கோப்பையை உயர்த்திக்காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன், அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுக்கான காசோலையும், இந்தியாவில் அறிமுகமாகும் மாருதி சுசுகி காரின் பிரஸ்ஸா எனும் மாடலின் முதல் காரும் பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் பேசிய அசிம், தனது ஏவி பார்த்துவிட்டு, “லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.. இது பாவலன் பாரதி சொன்னது. என்னை நாமினேட் செய்த அனைவருமே என் நண்பர்கள் தான். அது டாஸ்க். ஆனாலும் அப்படி நாமினேட் செய்தும் என்னை என் மக்கள் உள்ளே கொண்டு வந்தார்கள்.
தேடிச் சோறுநிதந்தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, மனம் வாடித்துன்ப மிகஉழன்று, பிறர் வாடப் பலசெயல்கள் செய்து, நரை கூடிக் கிழப்பருவமெய்தி, கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும், பல வேடிக்கை மனிதரைப் போலே, நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? வீழ மாட்டேன். வீறுகொண்டு எழுவேன், ஏனென்றால் நான் திமிரி எழும் தமிழன். எனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கும், என் உள்ளத்திலும் நிறைந்திருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கும், தமிழ் இல்லத்திலும் குடியிருக்கும் எனதன்பு வணக்கம். உங்களிடம் இருந்து விடைபெறும் எளிய தாயின் மகன் அசிம்.” என பேசினார். இதை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Also Read | "40 வருஷமா Waiting".. கைவிடாத முதியவருக்கு 88 வயதில் அடித்த அதிர்ஷ்டம்.. ஒரே இரவில் கோடீஸ்வரர்!!
மற்ற செய்திகள்