'நானும் ஒரு விவசாயி, உங்க கஷ்டம் எனக்கு தெரியும்'... 'கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம்'... முதல்வர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையில் பிரசாரம் தொடங்கிய அவர் மாலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் பிரசாரம் செய்தார். இரவு தஞ்சை ரயிலடி பகுதியில் பேசினார். ரவில் தஞ்சையில் தங்கிய இவர் இன்று காலை திருவையாறு சென்றார்.
அங்குத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர், ''இந்த பகுதியில் உள்ள கல்லணை கால்வாயை நவீனப்படுத்திச் சீரமைப்பதற்காக ரூ.290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று நீங்கள் எல்லாம் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் தங்களின் நிலத்தைப் பறித்து விடுவார்கள், கைப்பற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில் இருந்தீர்கள். இந்த அம்மாவின் அரசானது அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதனை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறோம்.
ஆனால் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் தான். நானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் துன்பத்தை, துயரத்தை, வேதனையை, கஷ்டத்தை உணர்ந்து அவர்களது துன்பத்தைப் போக்கும் வகையில், அவர்களது அச்சத்தைப் போக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்ட பாதுகாப்பினை அளித்துள்ளோம். எனது லட்சியமே நீர் மேலாண்மையை உருவாக்குவதுதான்.
மேலும் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இந்த திட்டத்திற்கு ரூ.80 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும். உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ, அதே போன்று விவசாயிகளுக்கு நீர் முக்கியம். இதை உணர்ந்தே இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறேன். இதற்காக ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்களிடம் பேசி அவர்களும் ஒத்துழைப்பு தருவதாகக் கூறியுள்ளார்கள். அம்மாவின் இந்த அரசானது தொடரும்போது, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிச்சயமாக வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்'' என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்