மனைவி கொடுத்த செம ஐடியா.. இப்ப ரூ.25 ஆயிரம் மிச்சம்.. “பொண்டாட்டி பேச்ச கேளுங்க சார்”.. வைரலாகும் பதிவு..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இணையவாசியான ரஞ்சித் என்பவரின் மனைவியின் பாராட்டுத்தக்க செயல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மனைவி கொடுத்த செம ஐடியா.. இப்ப ரூ.25 ஆயிரம் மிச்சம்.. “பொண்டாட்டி பேச்ச கேளுங்க சார்”.. வைரலாகும் பதிவு..

Also Read | குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஏன்.? பட்ஜெட்டில் நிதியமைச்சர் விளக்கம்.

பிரபல இணையவாசி ரஞ்சித் என்பவர் நிறைய டெக்னாலஜி குறித்த தகவல்களை தம்முடைய சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவர் தன்னுடைய மனைவியிடம் தன் வீட்டில் படங்கள் பார்ப்பதற்காக ஒரு rollable motorised projector screen வாங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இதற்கு 20 முதல் 25 ஆயிரம் வரை செலவாகும் என்பதையும் அவர் தன் மனைவியிடம் கூறியிருக்கிறார்.

இதைக்கேட்ட அவருடைய மனைவி யோசித்த புத்திசாலித்தனமான ஒரு யோசனை தான் தற்போது வைரலாகி வருகிறது.பொதுவாகவே பெண்க ள் வீட்டில் தேவையில்லாத செலவுகளை கவனித்து அவற்றை குறைப்பதில் கவனம் செலுத்துவார்கள். அப்படித்தான் ரஞ்சித்தின் மனைவியும் செய்திருப்பதாக இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர். இதனால் 25 ஆயிரம் ரூபாய் வரை ரஞ்சித்துக்கு மிச்சமாகியிருக்கிறது.

ஆம், rollable motorised projector screen வாங்க வேண்டும் என தன் மனைவியிடம் ரஞ்சித் சொல்ல, அதை வாங்குவதற்கு பதிலாக ஒரு வெள்ளை ஸ்கிரீனை அறையின் அலமாரியில் அழகாக இழுத்து மாட்டியிருக்கிறார் ரஞ்சித்தின் மனைவி. இது பழைய காலங்களில் இருப்பது போன்று ஒரு அட்வென்ச்சர் பீலிங்கை தருகிறது. அதே சமயம் 25 ஆயிரம் ரஞ்சித்துக்கு மிச்சமாகி இருக்கிறது. இப்படி எந்த செலவும் இல்லாமல் மனைவியால் உருவாக்கப்பட்ட இந்த ப்ரொஜெக்டரில் படம் பார்க்கக்கூடிய போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ரஞ்சித்.

இதை பார்த்த பல இணையவாசிகள், “எப்போதும் மனைவி பேச்சை கேட்பதுதான் நல்லது” என்று இதற்கு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read | “தென் கிழக்கு ஆசியாவை ஆண்ட சோழப்பேரரசு - தஞ்சையில் வருகிறது சோழர் அருங்காட்சியகம்” - நிதியமைச்சர்.!

VIRAL, TRENDING

மற்ற செய்திகள்