உன் உடம்புல வித்தியாசமான வாசனை வருது.. நான் சொல்ற மாதிரி செஞ்சு 'பத்தினி'னு நிரூபிச்சு காட்டு.. கணவனுக்காக மனைவி செய்த கொடூரம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: கணவன் கூறியதற்காக கற்பை நிரூபிக்க மனைவி செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உன் உடம்புல வித்தியாசமான வாசனை வருது.. நான் சொல்ற மாதிரி செஞ்சு 'பத்தினி'னு நிரூபிச்சு காட்டு.. கணவனுக்காக மனைவி செய்த கொடூரம்

வட சென்னையின் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். 41 வயதான இவர் இந்தியன் ஆயில் கம்பெனியில் தற்காலிக ஊழியராக டேங்கர் லாரி ஓட்டி வருக்கிறார். இவருக்கு ஜெயலட்சுமி (40) என்ற மனைவி உள்ளார்.

மூன்றாவது திருமணம்:

இதற்கு முன், ஜெயலட்சுமி ஏற்கனவே பால்வண்ணன் என்பவரை முதல் கணவராக திருமணம் செய்த நிலையில் பால்வண்ணன் பிரிந்து சென்ற பிறகு அவருடைய சகோதரனான துரைராஜ் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் துரைராஜூம் பிரிந்து சென்றுள்ளார். இதனை அடுத்து தான் ஜெயலட்சுமி மூன்றாவதாக பத்மநாபனை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஜெயலட்சுமிக்கு தனது இரண்டாவது கணவரான துரைராஜ் மூலம் பிறந்த பவித்ரா என்ற பெண் கூடவே வளர்த்து வந்தார். பத்மநாபனுடன் திருமணமான பிறகு பவித்ரா மற்றும் ஜெயலட்சுமி  அனைவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்துள்ளனர்.

சந்தேகப்பட்ட கணவன்:

ஜெயலட்சுமி மீது சந்தேகம் கொள்ளும் பத்மநாபன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். சண்டையின் போது அடிக்கடி பத்மநாபன் ஜெயலட்சுமியிடம், உன் உடம்பில் வித்தியாசமான வாசனை வருகிறது, நீ எங்கு சென்று வருகிறாய் என சந்தேகப்பட்டு தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

மனைவி செய்த கொடூரம்:

இந்த நிலையில் எப்போதும் போல நேற்று நள்ளிரவு ஜெயலட்சுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு திட்டியுள்ளார். அதற்கு ஜெயலட்சுமி அப்படியெல்லாம் எந்த செயலும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார். இதனை நம்பாத பத்மநாபன், 'நீ கற்புக்கரசியாக இருந்தால் பவித்ராவை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்து, நீ பத்தினி என்றால் அவள் உடம்பில் தீ பிடிக்காது' எனச் சொல்லியுள்ளார்.

என்ன செய்வதென்று புரியாத நிலையில் ஜெயலட்சுமியம் விரக்தியில் பவித்ரா மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி உள்ளார். பவித்ராவின் உடம்பில் தீ பற்றியதும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக காப்பாற்ற இருவரும் போர்வையைப் போட்டு அணைக்க முயற்சியும் செய்துள்ளனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி:

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு 78% தீக்காயம் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் பவித்ரா சிகிச்சை பெற்று வந்தார்.

உயிரிழப்பு:

இந்நிலையில் பவித்ராவிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றுள்ளார். துரதிஷ்டவசமாக சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். திருவொற்றியூர் வழக்குப்பதிவு செய்து பத்மநாபன் மற்றும் ஜெயலட்சுமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையம் சோகத்தையும் ஆழ்த்தியுள்ளது.

WIFE, HUSBAND, TIRUVOTTIYUR, கற்பு, கணவன், மனைவி, திருவொற்றியூர், சென்னை, பத்தினி

மற்ற செய்திகள்