'பேஸ்புக் ஓப்பன் பண்ணா...' 'டைம்லைன் முழுக்க மார்பிங் பண்ணி ஆபாசப்படம்...' 'அதிர்ந்து போன கணவன்...' யாரு பார்த்த வேலைன்னு விசாரணைல தெரிஞ்சுருக்கு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தியதால் கணவரின் முகநூலில் நுழைந்து ஆபாச படங்களை வெளியிட்ட மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

'பேஸ்புக் ஓப்பன் பண்ணா...' 'டைம்லைன் முழுக்க மார்பிங் பண்ணி ஆபாசப்படம்...' 'அதிர்ந்து போன கணவன்...' யாரு பார்த்த வேலைன்னு விசாரணைல தெரிஞ்சுருக்கு...!

திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் பாலக்கரை காஜியார் தெருவைச் சேர்ந்த மோகன் ஜெய்கணேஷ், முகநூலில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர். இவருக்கும் மயிலாடுதுறையைச் சேர்ந்த தாட்சாயினி என்பவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, தற்போது கருத்து வேறுபட்டால் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

மனைவியுடன் சேர வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் மோகன் ஜெய்கணேஷ், மீதிருந்த காதலில் அவர்களின் திருமண நாளின் போது திருமணத்தில் எடுத்த படங்களை முகநூலில் பதிவு செய்து வந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி தாட்சாயினி அந்தப் படங்களை நீக்குமாறு கூறியுள்ளார். ஆனால் நீ இப்பவும் என் மனைவி தான், உன்னுடன் இருக்கும் படத்தை எனது முகநூலில் பதிவு செய்வதில் என்ன பிரச்சனை எனக் கூறி இப்போதைக்கு என்னால் நீக்கமுடியாது என்றும் பதில் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தாட்சாயினி, கணவன் முன்பு வைத்திருந்த பாஸ்வர்ட் இன்னும் ஆக்ட்டிவாக உள்ளதா...? என அறிந்து அதன் மூலம் அவரை பழிவாங்க எண்ணியுள்ளார்.

இதற்கு உதவுமாறு தனது கல்லூரி கால நண்பரான தஞ்சாவூர் மாவட்டம் சிவாஜி நகரைச் சேர்ந்த 28 வயதான கிருபாகரனை உதவிக்கு அழைத்துள்ளார். தாட்சாயினி மற்றும் சிவாஜி ஆகியோர் சேர்ந்து பேராசிரியாரான மோகன் ஜெய்கணேசின் முகநூல் பக்கத்தில் ஆபாச படங்களை பதிவிட முடிவு செய்துள்ளனர்.

மேலும் பல பெண்களின் ஆபாசப் படங்களை மார்பிங் செய்து தன் கணவர் ஜெய்கணேஷ் முகநூலில் பதிவேற்றியுள்ளார் தாட்சாயினி. இதனை அறிந்த மோகன ஜெய்கணேஷ் அதிர்ச்சியடைந்து பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் இவ்வாறான செயலை செய்தது, தாட்சாயினியும், கிருபாகரனும் என தெரியவந்துள்ளது.

தற்போது தாட்சாயினி மற்றும் சிவாஜி மீது மோசடி, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள தாட்சாயினியை போலீசார் தேடி வருகின்றனர்.

TRENDING NEWS

மற்ற செய்திகள்